CSK வீரர் படைந்த மோசமான சாதனை.. முடிஞ்சு! இனி அணியில் இடமே கிடையாது – முழு விவரம்!

CSK Player Aman Hakim Khan Worst Record In Vijay Hazare Trophy: விஜய் ஹசாரே தொடர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் புதுச்சேரி கிரிக்கெட் அணி கலந்து கொண்டு விளையாடி வருகிறது. இந்த அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஐபிஎல் மினி ஏலத்தில் வாங்கப்பட்ட அமன் கான் வழிநடத்தி வருகிறார். இந்த அணி நேற்று (டிசம்பர் 29) ஜார்கண்ட் அணிக்கு எதிராக விளையாடியது. இதில் டாஸ் வென்ற புதுச்சேரி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்த நிலையில்தான் இந்த அணியின் கேப்டனும் சிஎஸ்கே அணி வீரருமான அமன் கான் ஒரு மோசமான சாதனையை படைத்துள்ளார். 

Add Zee News as a Preferred Source

அகமதாபாத்தில் நடந்த இப்போட்டியில் ஜார்க்கண்ட் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 368 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக குமார் குஷாக்ரா 105, அனுகுல் ராய் 98, உத்கர்ஷ் சிங் 74 ரன்களை விளாசினர். மறுபுறம் பந்து வீச்சில் புதுச்சேரி அணி சொதப்பிய நிலையில், அந்த அணியின் கேப்டனும் சிஎஸ்கே வீரருமான அமன் கான் 10 ஓவர்கள் வீசி 123 ரன்களை வாரி வழங்கினார். இது விஜய் ஹசாரே டிராபி தொடரிலேயே ஒரு மோசமான சாதனையாக பதிவாகியது. இதற்கு முன்பாக அதிக ரன்கள் வாரி வழங்கியதில் சாதனை வைத்திருந்த அருணாச்சல பிரதேசத்தின் மிபோம் மோசு 9 ஓவர்கள் வீசி 116 ரன்கள் கொடுத்திருந்தார். 

பவுலிங் ஆல்-ரவுண்டரான அமன் கானை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சமீபத்தில் நடந்து முடிந்த 2026 ஐபிஎல் மினி ஏலத்தில் ரூ. 40 லட்சத்திற்கு வாங்கியது. இதற்கு முன்பாக 2023 சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காகவும் 2022ஆம் ஆண்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகவும் ஐபிஎல்லில் விளையாடி உள்ளார். இந்த சூழலில், அமன் கான் இப்படி ஒரு மோசமான சாதனையை படைத்தது ரசிகர்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இம்முறை நிறைய இந்திய வீரர்களை கொண்டு ஒரு மினி இந்திய அணியாக திகழ்கிறது. தற்போதைய நிலவர படி பிளேயிங் லெவனிலேயே இரண்டு மூன்று அன்கேப்டு வீரர்கள் விளையாட அதிக வாய்ப்புள்ளது. எனவே மற்ற உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடுபவர்களுக்கு வரும் சீசனில் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கலாம். 

மற்ற சிஎஸ்கே வீரர்கள் 

நேற்றைய விஜய் ஹசாரே போட்டிகளில் சிஎஸ்கே அணி வீரர்களான அன்சூல் கம்போஜ் 3 விக்கெட்களையும் ராமசந்திரன் கோஷ் 7 விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினர். அதேபோல் SA20ல் அகீல் ஹொசைன் 1 விக்கெட் மற்றும் 10 பந்துகளில் 22 ரன்கள் அடித்து அசத்தினார். பிக்பேஷ் லிக் தொடரில் நாதன் எல்லிஸ் 3 விக்கெட்களை எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

2026 ஐபிஎல்லுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஆயுஷ் மத்ரே, எம்.எஸ். தோனி, சஞ்சு சாம்சன், டெவால்ட் ப்ரீவிஸ், உர்வில் படேல், ஷிவம் துபே, ஜேமி ஓவர்டன், ராமகிருஷ்ண கோஷ், நூர் அகமது, கலீல் அகமது, அன்ஷுல் கம்போஜ், குர்ஜப்னீத் சிங், ஷ்ரேயாஸ் கோபால், முகேஷ் சவுத்ரி, நாதன் எல்லிஸ், அகேல் ஷர்மான், பிரஷாந்த் ஷர்மான், பிரஷாந்த் ஷர்மான், சர்பராஸ் கான், மாட் ஹென்றி, ராகுல் சாஹர், சாக் ஃபௌல்க்ஸ். 

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.