Shreyas Iyer Latest News: இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டனும் நட்சத்திர பேட்ஸ்மேனுமான ஸ்ரேயாஸ் ஐயர் கடைசியாக அக்டோபரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில்தான் விளையாடினார். அத்தொடரில் விளையாடியபோது, ஒரு கேட்ச் எடுக்க முயன்று அவரது அடி வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. அதன்பின் இந்திய அணியில் இருந்து விலகி சிகிச்சை மேற்கொண்டார். அடி வயிற்றில் பலத்த காயம் மற்றும் ரத்தக்கசிவு ஏற்பட்டதன் காரணமாக கடந்த சில மாதங்களாக எந்த ஒரு போட்டியிலும் கலந்து கொள்ளாமல் முழு ஓய்வில் இருந்து வருகிறார்.
Add Zee News as a Preferred Source
When will Shreyas Iyer return to the Indian team: ஸ்ரேயாஸ் ஐயர் எப்போது மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார்
காயத்தில் இருந்து மெல்ல மெல்ல குணமடைந்து வரும் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய் அணிக்கு எப்போது மீண்டும் திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நட்சத்திர மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் எப்போது அணிக்கு திரும்புவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயர் சமீபத்தில் நடைபெற்ற மினி ஏலத்தில் அவரது பஞ்சாப் அணி நிர்வாகத்துடன் கலந்து கொண்டதை நம்மால் பார்த்திருக்க முடியும். இதனால் அவர் காயத்தில் இருந்து 80 சதவீதம் சரியாகிவிட்டார் என யுகிக்க முடிந்தது. இந்த சூழலில், அவர் இன்று (டிசம்பர் 30) பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது உடற்தகுதியை நிரூபிக்க இருக்கிறார். இதையடுத்து அவர் விஜய் ஹசாரே தொடரில் மும்பை அணிக்காக ஜனவரி 3 மற்றும் 6ஆம் தேதிகளில் நடக்கும் போட்டிகளில் விளையாட இருக்கிறார் என கூறப்படுகிறது.
Shreyas Iyer Injury Update: நியூசிலாந்து ஒருநாள் அணியில் ஸ்ரேயாஸ் ஐயர்?
அதன்பின் அவர் ஜனவரி 11ஆம் தேதி தொடங்க இருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக பேசிய மும்பை கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ஸ்ரேயாஸ் ஐயர் மும்பை அணிக்காக 2 போட்டிகளில் விளையாட இருக்கிறார். தற்போது பேட்டிங் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவர் நலமாக உள்ளார். நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் விளையாட அவர், இந்திய அணியுடன் இணைவார் என கூறினார்.
தகவல் கிடைத்ததுபோல், அவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியுடன் இணைந்தால், அது இந்திய அணிக்கு கூடுதல் பலம் அளிக்கும் என்பது சந்தேகம் இல்லை.
IND vs NZ ODI: இந்திய அணி அறிவிப்பு எப்போது?
நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படாமல் உள்ளன. இந்த அறிவிப்பு வரும் ஜனவரி 3 அல்லது 4ஆம் தேதி வெளியாகும் என தெரிகிறது. அப்போது ஸ்ரேயாஸ் ஐயரின் பெயர் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் இந்தியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன.
New zealand Team For India ODI Series: இந்தியாவுக்கு எதிரான நியூசிலாந்து ஒருநாள் அணி
மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), ஆதி அசோக், கிறிஸ்டியன் கிளார்க், ஜோஷ் கிளார்க்சன், டெவன் கான்வே, ஜாக் ஃபோல்க்ஸ், மிட்ச் ஹே, கைல் ஜேமிசன், நிக் கெல்லி, ஜெய்டன் லெனாக்ஸ், டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் ரே, வில் யங்.
IND vs NZ: இந்தியா மற்றும் நியூசிலாந்து டி20 அணி விவரம்
இந்தியா: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், ரின்கு சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன்
நியூசிலாந்து: மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவன் கான்வே, ஜேக்கப் டஃபி, ஜாக் ஃபோல்க்ஸ், மேட் ஹென்றி, கைல் ஜேமீசன், பெவன் ஜேக்கப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திர, டிம் ராபின்சன், இஷ் சோதி.
About the Author
R Balaji