Parasakthi: "சே'னு கூப்பிடும்போது ரொம்ப பவர்ஃபுல்லாக இருந்தது!" – சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனின் 25-வது படமான ‘பராசக்தி’ பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவிருக்கிறது.

சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். அவரைத் தாண்டி அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

முதலில் இத்திரைப்படம் ஜனவரி 14-ம் தேதி வெளியாவதாக அறிவித்திருந்தனர். அதன் பிறகு இப்படத்தின் ரிலீஸ் தேதியை 10 தேதிக்கு ப்ரீபோன்ட் செய்தனர்.

Parasakthi
Parasakthi

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் புரொமோஷனுக்காக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இப்படம் பேசும் விஷயங்களை மையப்படுத்தி ஒரு கண்காட்சியைத் தயார் செய்திருந்தார்கள். அதற்கு மக்களும் நல்லதொரு வரவேற்பு கொடுத்திருந்தனர்.

தற்போது ‘பராசக்தி’ திரைப்படம் உருவான விதம் குறித்து காணொளி ஒன்றை இப்படக்குழு வெளியிட்டிருக்கிறது. இந்த காணொளியை பிரத்யேகமாக அந்தக் கண்காட்சியிலும் திரையிட்டிருந்தார்கள்.

அந்தக் காணொளியில் சிவகார்த்திகேயன், “எனக்கு செழியன் என்கிற பெயரே ரொம்ப பிடிச்சிருந்தது. அதை அனைவரும் ‘சே’னு கூப்பிடும்போது ரொம்ப பவர்ஃபுல்லாக இருந்தது.

இவ்வளவு பவர்ஃபுல்லான, எமோஷன்கள் கொண்ட கதாபாத்திரமாக செழியன் இருந்தாலும் அதுல என்டர்டெயின்மென்ட் பண்றதுக்கான இடமும் இருந்துச்சு. ஸ்கிரிப்ட் ரீடிங் தருணம் ஆபீஸில் நடைபெற்றது.

ஒவ்வொரு பகுதி படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன்னாடியும் ஸ்கிரிப்ட் படிப்போம். இது மாதிரி நான் படிச்சிருந்தா, டாக்டர் ஆகியிருப்பேன்.

இல்லைனா, பொறியியல் படிப்புல கோல்ட் மெடலிஸ்ட் ஆகியிருப்பேன்னு எங்க வீட்டுல சொன்னேன். இந்தப் படத்துக்காகதான் முதல் முறையாக ஹைவேஸ் பேண்ட் அணிந்தேன்.

Sivakarthikeyan
Sivakarthikeyan

அதுவே சுவாரஸ்யமான தருணமாக இருந்துச்சு. இதுக்கு முன்னாடி பாடலுக்காககூட அந்த காஸ்டியூம் நான் போட்டது கிடையாது.

மாணவர்களும், மாணவ இயக்கங்களும் எவ்வளவு பவர்ஃபுல்னு சொல்வதுதான் இந்த ஸ்கிரிப்ட். இப்படியா ஒரு ஸ்கிரிப்ட் இருக்கும்போது, ஒரு ஹீரோவாக அதைச் செய்ய நான் ஏன் யோசிக்கணும்!

நம் மண், மொழி சார்ந்த படம் இது. ‘பராசக்தி’ முழுமையான கமர்ஷியல் திரைப்படம். அனைத்து வகையான எமோஷன்களும் படத்துல இருக்கு.

இந்தப் படம் திரையரங்கத்துல அதிரடியான அனுபவத்தைக் கொடுக்கும்.” எனக் கூறியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.