சென்னை ஏழு கிணறு (Seven Wells) பகுதியில் தங்க நகைகளை திருடிய வழக்கில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயது பெண்ணை சென்னை மாநகர காவல்துறை டெல்லியில் கைது செய்துள்ளது. ஆவடி, கோவில்பதாகை பகுதியைச் சேர்ந்த அசோக் குமார் (44) தனது குடும்பத்துடன், கடந்த டிசம்பர் 10ஆம் தேதி ஏழு கிணறு பகுதியில் உள்ள கடையில் இருந்து சுமார் 69 கிராம் தங்க நகைகள் வாங்கியுள்ளார். பின்னர், சௌகார்பேட்டை, பெருமாள் முதலி தெருவில் உள்ள ஓட்டலில் உணவு […]