Chennai Super kings Player Dewald Brevis: தென்னாப்பிரிக்காவின் பிரபல டி20 லீக்கான SA20 தொடர் டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில் பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான டெவால்ட் ப்ரீவிஸ் விளையாடி வருகிறார். இந்த சூழலில், இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் கடுமையாக சொதப்பி உள்ளார்.
Add Zee News as a Preferred Source
Dewald Brevis SA20 Performance: முதல் போட்டியிலேயே தடுமாற்றம்
பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணி இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி இருக்கிறது. முதலில், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது. இதில் முதலில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்த நிலையில், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 168 ரன்களை எடுத்தது. இதையடுத்து 169 ரன்கள் எடுத்தால் என்ற இலக்குடன் களமிறங்கிய பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணி 146 ரன்களை மட்டுமே எடுத்தது. இப்போட்டியில் தொடக்க வீரர்களான வில் ஸ்மீட் மற்றும் பிரைஸ் பார்சன்ஸ் முறையே 34 மற்றும் 41 ரன்களை அடித்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கில் ஆட்டமிழந்து அணியின் தோல்விக்கு காரணமாகினர்.
இதில் மிடில் ஆர்டரில் களமிறங்கிய சிஎஸ்கே அணியின் வீரர் டெவால்ட் ப்ரீவிஸ் 6 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதேபோல் பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணிக்காக அவர் விளையாடிய இரண்டாவது போட்டியிலும் டெவால்ட் பிரீவிஸ் சொதப்பவே செய்தார்.
Dewald Brevis SA20 Performance: இரண்டாவது போட்டியிலும் சொதப்பிய டெவால்ட் ப்ரீவிஸ்
பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணி தனது இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் அணியை எதிர்கொண்டு விளையாடியது. அப்போட்டியிலும் பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணி தோல்வியடையவே செய்தது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 188 ரன்கள் அடித்தது. இதையடுத்து களமிறங்கிய பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணி 140 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
இப்போட்டியிலும் சிஎஸ்கே அணி வீரர் டெவால்ட் ப்ரீவிஸ் மோசமான செயல்பாட்டையே வெளிப்படுத்தினார். அவர் வெறும் 12 ரன்களில் அட்டமிழந்து வெளியேறினார். இரண்டு போட்டிகளிலும் தனது அணிக்கு வெற்றி பெற உதவ அவரால் பங்களிக்க முடியவில்லை. இது ரசிகர்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
CSK Best Playing XI: பிளேயிங் 11ல் சந்தேகமாகும் இடம்?
ஏற்கனவே கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடுமையாக சொதப்பிய நிலையில், வரும் சீசனில் எப்படியாவது தொடரை வென்றாக வேண்டும் என்ற நோக்குடன் உள்ளது. இந்த நிலையில், சிஎஸ்கே அணியின் முக்கிய வீரரான டெவால்ட் ப்ரீவிஸ் மோசமாக விளையாடி இருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு போட்டிகளில் தொடர்ந்து சொதப்பிய பிரீவிஸ் வரும் போட்டிகளிலும் ரன்கள் சேர்க்கவில்லை என்றால் வரும் 2026 ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் 11ல் அவரது இடம் நிலையற்றதாகிவிடும்.
CSK Retained Dewald Brevis: டெவால்ட் ப்ரீவிஸை தக்கவைத்த சிஎஸ்கே
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெவால்ட் பிரீவிஸை கடந்த சீசனில் காயம் அடைந்த வீரருக்கு மாற்று வீரராக அணிக்குள் கொண்டு வந்தது. அவரை ரூ. 2.2 கோடிக்கு வாங்கிய சிஎஸ்கே அணி வரும் 2026 ஐபிஎல்லை முன்னிட்டு தக்கவைத்துள்ளது. அவர் மிடில் ஆர்டரில் ஒரு பலம் வாய்ந்த வீரராக அவர் கருதப்படுகிறார்.
IPL 2026 Chennai Super Kings Full Squad: 2026 ஐபிஎல்லுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஆயுஷ் மத்ரே, எம்.எஸ். தோனி, சஞ்சு சாம்சன், டெவால்ட் ப்ரீவிஸ், உர்வில் படேல், ஷிவம் துபே, ஜேமி ஓவர்டன், ராமகிருஷ்ண கோஷ், நூர் அகமது, கலீல் அகமது, அன்ஷுல் கம்போஜ், குர்ஜப்னீத் சிங், ஷ்ரேயாஸ் கோபால், முகேஷ் சவுத்ரி, நாதன் எல்லிஸ், அகேல் ஷர்மான், பிரஷாந்த் ஷர்மான், பிரஷாந்த் ஷர்மான், சர்பராஸ் கான், மாட் ஹென்றி, ராகுல் சாஹர், சாக் ஃபௌல்க்ஸ்.
About the Author
R Balaji