சென்னை: தமிழ்நாட்டில் நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட 3% குறைவாக பெய்துள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இந்தியாவில் ஜூன் 1-ந் தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை பெய்யும் மழை தென்மேற்கு பருவ மழையாகவும், அக்டோபர் 1-ந் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை பெய்யும் மழை வடகிழக்கு பருவ மழையாகவும் பதிவு செய்யப்படுகிறது. நடப்பாண்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை, அக்டோபர் 15ந்தேதி தொடங்கியது. இதை […]