IND vs NZ: இந்திய அணிக்கு திரும்பும் முகமது ஷமி? பிசிசிஐ எடுக்கும் முக்கிய முடிவு!

Mohammed Shami Latest News: இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவர் கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலக் கோப்பைக்கு பிறகு காயம் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்தார். இதையடுத்து காயத்தில் இருந்து குணமடைந்த அவர், வாய்ப்புகளுக்காக காத்திருக்க வேண்டி இருந்தது. இந்த சூழலில், இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற சாம்பியன் டிராபியில் வாய்ப்பு கிடைத்து விளையாடினார். 

Add Zee News as a Preferred Source

Mohammed Shami: இந்தியாவுக்காக முகமது ஷமி கடந்த மார்ச்சில் விளையாடினார்  

அதன் பிறகும் சிறு சிறு காயம் மற்றும் பணிச்சுமை காரணமாக இந்திய அணியில் தொடர்ந்து இடம் பிடிக்க முடியவில்லை. கிட்டத்தட்ட அவர் இந்திய அணிக்காக விளையாடி 10 மாதங்கள் ஆகின்றன. இந்த நிலையில், முகமது ஷமி மீண்டும் இந்திய அணிக்கு  திரும்புகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாமல் உள்ளூர் போட்டிகளில் தன்னை நிரூபிக்க போராட்டிக்கொண்டிருந்த அவர் எங்கே அப்படியே ஓய்வை அறிவித்து விடுவாரோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் இருந்தன. 

இந்த நிலையில்தான் மகிழ்ச்சிகரமான செய்தியாக அவர் அணிக்கு திரும்புகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. வரும் ஜனவரி 11ஆம் தேதி நியூஸிலாந்து அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் தொடங்க இருக்கிறது. இதில் முகமது ஷமி பங்கேற்பார் என தெரிகிறது. இது தொடர்பாக பிசிசிஐயின் நம்பகமான வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. 

India vs New Zealand ODI Series: நியூசிலாந்து தொடரில் முகமது ஷமி? 

அதாவது, முகமது ஷமி தொடர்ந்து தேர்வுக் குழுவின் விவாதத்தில் இருந்து வருகிறார் என்றும் அவர் இன்னும் முழுமையாக இந்திய அணியை விட்டு விலகிவிடவில்லை என்றும் கூறப்படுகிறது. அவர் உடற்தகுதி மீது தேர்வுக்குழு கவலையாக இருந்தது. ஆனால் தற்போது அவர் நல்ல ஃபிட்னஸுடன் இருப்பதால் அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பலாம். 2027 உலகக் கோப்பையை மனதில் வைத்து முடிவு எடுக்கப்படலாம். அவர் நியூசிலாந்து தொடருக்கு தேர்வாவதற்கு அதிக வாய்ப்புள்ளது என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Mohammed Shami In Domestic Cricket: உள்ளூர் போட்டிகளில் அசத்தல் 

முகமது ஷமி இந்திய அணியில் தற்போது வரை இடம் பெறாத நிலையில், உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். சமீபமாக சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் பெங்கால் அணிக்காக விளையாடினார். அதில் 7 போட்டிகளில் 16 விக்கெட்களை எடுத்து அசத்தினார். அதேபோல் தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே டிராபியிலும் விளையாடும் அவர் இதுவரை நடந்த 3 போட்டிகளில் 6 விக்கெட்களை வீழ்த்தி தனது ஃபார்மை நிரூபித்து வருகிறார். இது தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

Bumrah Rested For IND vs NZ ODI Series: பும்ராவுக்கு ஓய்வு – முகமது ஷமிக்கு வாய்ப்பு 

வரும் நியூசிலாந்து தொடரில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஒய்வு அளிக்கபட உள்ளது. இதன் காரணமாக சீனியர் வீரரான ஷமியை அணிக்குள் கொண்டு வந்து வேகப்பந்துவீச்சு படையை வழிநடத்தும் வாய்ப்பு அளிக்கபப்டலாம். இவரது வழிநடத்தலில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ரானா விளையாடும் பட்சத்தில் அவர்களுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும் என்பது சந்தேகம் இல்லை. இந்திய அணிக்கு முகமது ஷமி திரும்பும் செய்து வெளியான நிலையில், ரசிகர்கள் அவரது வருகைக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். 

Mohammed Shami For Indian Team: இந்தியாவுக்காக முகமது ஷமி

கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து இந்திய அணிக்காக முகமது ஷமி விளையாடி வருகிறார். இதுவரை 108 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 206 வுக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். அதேபோல் 64 டெஸ்ட் போட்டிகளில் 229  விக்கெட்களையும் 25 டி20 போட்டிகளில் 27 விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தி இருக்கிறார். மேலும்,  2023 ஒருநாள் உலகக் கோப்பையை வெல்வதற்கு முகமது ஷமி முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.