Chennai Super Kings Latest News: 2026 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 16ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இதில் 10 ஐபிஎல் அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை எடுத்துக்கொண்டது. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலம் சேர்க்கும் வீரர்களை தேர்வு செய்து வாங்கினர். சிஎஸ்கே அணி மினி ஏலத்திற்கு முன்பாகவே எதிர்கால விக்கெட் கீப்பராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் பேசி சஞ்சு சாம்சனை வர்த்தகம் செய்தது. இதற்கு விலையாக சிஎஸ்கே அணியின் தூணாக விளங்கி வந்த ரவீந்திர ஜடேஜா, இளம் வீரர் சாம் கரண் ஆகியோரை கொடுத்தது.
Add Zee News as a Preferred Source
Chennai Super Kings: உள்ளூர் வீரர்களுக்கு கோடிகளை கொட்டிய சிஎஸ்கே
இதனால் அந்த அணியின் மேல் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. மினி ஏலத்தில் எப்படியான வீரர்களை எடுக்க போகிறார்கள் என்று. அதனை ஓரளவு பூர்த்தி செய்யும் வகையில் நிர்வாகத்தின் தேர்வும் இருந்தது. அவர்கள் உள்ளூர் வீரர்கள் மீது பெரிய நம்பிக்கை வைத்து தலா ரூ. 14 கோடிக்கு இரண்டு வீரர்களை வாங்கியது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் தற்போது தங்களின் ஃபார்மை நிரூபித்து வருவது அந்த அணி ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Ruturaj Gaikwad: ருதுராஜ் கெய்க்வாட்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட். இவர் தற்போது விஜய் ஹசாரே டிராபி தொடரில் மகராஷ்டிரா அணிக்காக விளையாடி அந்த அணியை வழிநடத்தியும் வருகிறார். இவர் சமீபத்தில் விளையாடிய உத்தரகாண்டுக்கு எதிரான போட்டியில் 113 பந்துகளில் 12 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 124 ரன்கள் அடித்து அசத்தி இருக்கிறார்.
Sarfaraz Khan: சர்பராஸ் கான்
மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி சர்பராஸ் கானை அடிப்படை விலையான ரூ. 75 லட்சத்திற்கு வாங்கியது. இவரும் தற்போது விஜய் ஹசாரே டிராபி தொடரில் விளையாடி வருகிறார். மும்பை அணிக்காக விளையாடி வரும் இவர், சமீபத்தில் நடைபெற்ற கோவா அணிக்கு எதிரான போட்டியில் 75 பந்துகளில் 157 ரன்களை குவித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து உள்ளார்.
Prashant Veer: பிரசாந்த் வீர்
2026 ஐபிஎல் மினி ஏலத்தில் பிரசாந்த் வீர் சென்னை அணியால் ரூ. 14 கோடிக்கு வாங்கப்பட்டார். இதன் மூலம் உள்ளூர் வீரர்களின் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரராக அறியப்பட்டார். இவர் தற்போது விஜய் ஹசாரே டிராபி தொடரில் உத்தர பிரதேச அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரையில் விளையாடிய 4 போட்டிகளில் 6 விக்கெட்களை வீழ்த்தி பேட்டிங்கில் ஒரு போட்டியில் 35 ரன்களையும், மற்றொரு போட்டியில் 12* ரன்களையும் எடுத்து அசத்தி வருகிறார்.
Akeal Hosein: அகீல் ஹொசைன்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர் அகீல் ஹொசைன் மினி ஏலத்தில் சிஎஸ்கே அணியால் ரூ. 2 கோடிக்கு வாங்கப்பட்டார். இவர் தற்போது நடைபெற்று வரும் SA20ல் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரையில் விளையாடிய 3 போட்டிகளில் 4 விக்கெட்களையும் ஒரு போட்டியில் 10 பந்துகளில் 22 ரன்களை குவித்தும் அசத்தி இருக்கிறார்.
Dewald Brevis: டெவால்ட் ப்ரீவிஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த சீசனில் பாதியில் சேர்ந்தார் தென்னாப்பிரிக்கா அதிரடி வீரர் டெவால்ட் ப்ரீவிஸ். இவர் தற்போது நடைபெற்று வரும் SA20 அணியில் விளையாடி வருகிறார். இவர் இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பினாலும் மூன்றாவது போட்டியில் 13 பந்துகளில் 36 ரன்கள் அடித்து களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தார். இப்போட்டியின் மூலம் அவர் ஃபார்மிற்கு திரும்ப தொடங்கி உள்ளார்.
CSK Awaits To Give Strong Comeback In 2026 IPL: 2026ல் கலக்கப்போகும் சிஎஸ்கே அணி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2025 ஐபிஎல் சீசனில் கடுமையாக சொதப்பியது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், வரும் 2026ஆம் ஆண்டு கம்பேக் கொடுக்க காத்திருக்கின்றது. அதற்கு ஏற்றவாறு அந்த அணியின் வீரர்களும் தற்போது ஃபார்மில் உள்ளனர். இது அந்த அணியின் ரசிகர்களுக்கு 2026 ஐபிஎல்லில் சிஎஸ்கே அணி கண்டிப்பாக கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. இருப்பினும் ஐபிஎல் தொடங்க இன்னும் மூன்று மாத காலங்கள் உள்ளன. எனவே அதுவரை இவர்கள் தங்கள் ஃபார்மை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அப்படி வைத்துக்கொண்டால் மட்டுமே சிஎஸ்கே அணி ஜொலிக்கும் வாய்ப்பிருக்கிறது.
CSK Full Squad For 2026 IPL: 2026 ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஆயுஷ் மத்ரே, எம்.எஸ். தோனி, சஞ்சு சாம்சன், டெவால்ட் ப்ரீவிஸ், உர்வில் படேல், ஷிவம் துபே, ஜேமி ஓவர்டன், ராமகிருஷ்ண கோஷ், நூர் அகமது, கலீல் அகமது, அன்ஷுல் கம்போஜ், குர்ஜப்னீத் சிங், ஷ்ரேயாஸ் கோபால், முகேஷ் சவுத்ரி, நாதன் எல்லிஸ், அகேல் ஷர்மான், பிரஷாந்த் ஷர்மான், பிரஷாந்த் ஷர்மான், சர்பராஸ் கான், மாட் ஹென்றி, ராகுல் சாஹர், சாக் ஃபௌல்க்ஸ்.
About the Author
R Balaji