கவுதம் கம்பீருக்கு இவ்வளவு பெரிய பிள்ளைகளா? வைரலாகும் புகைப்படம்!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், லண்டனில் தனது குடும்பத்துடன் 2026 புத்தாண்டை கொண்டாடி உள்ளார். அடுத்ததாக நியூசிலாந்து தொடர் நடைபெறவுள்ள நிலையில், கம்பீர் தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். “புத்தாண்டில் மகிழ்ச்சியான முகங்கள்!” என்று  பதிவில் குறிப்பிட்டுள்ள கம்பீர், மற்றொரு படத்தில் குடும்பத்தினருடன் கைகோர்த்து நடந்து செல்லும் படங்களை வெளியிட்டுள்ளார். “எனக்கு பிடித்தவர்களுடன் கைகோர்த்து 2026ல் நுழைகிறேன்! அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Zee News as a Preferred Source

Gautam Gambhir celebrating new year in London. pic.twitter.com/I7WCn8iJkO

— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 1, 2026

நியூசிலாந்துக்கு எதிரான தொடர்

தற்போது விடுமுறையில் இருக்கும் கம்பீர், ஜனவரி 11 அன்று தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான வொயிட் பால் தொடருக்கு முன்னர் இந்திய அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 தொடரில் விளையாட உள்ளது. பரோடா, ராஜ்கோட் மற்றும் இந்தூரில் நடைபெறும் ஒருநாள் தொடர், ஜனவரி 11 முதல் 18 வரை நடைபெறும். பின்னர் டி20 தொடர் ஜனவரி 21 முதல் 31 வரை நாக்பூர், ராய்ப்பூர், குவஹாத்தி மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களில் ஐந்து போட்டிகள் நடைபெறும்.

ரோகித்-கோலியின் வருகை

டிசம்பரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றிகரமாக விளையாடிய ரோகித் சர்மா மற்றும் விராத் கோலி மீண்டும் ஒருநாள் அணிக்கு திரும்ப உள்ளனர். இருவரும் நடந்து முடிந்த விஜய் ஹசாரே கோப்பையில் தங்கள் மாநில அணிகளுக்காக சில போட்டிகள் விளையாடி உள்ளனர். நியூசிலாந்து தொடருக்கு முன்பு இந்த குறுகிய ஓய்வு கம்பீருக்கு நல்ல பலன் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025ல் அவரது அணுகுமுறைக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஒருநாள் மற்றும் டி20 வடிவங்களில் வெற்றிகளை பெற்றாலும், டெஸ்ட் தொடரில் தோல்விகளை சந்தித்து வருகிறார். இருப்பினும், T20 அணியில் ஷுப்மன் கில், ஹர்ஷித் ராணாவை சேர்த்ததற்காக கம்பீர் கடும் விமர்சனங்களுக்கு ஆளானார், இந்த தவறை தேர்வாளர்கள் T20 உலக கோப்பைக்கு முன் சரி செய்துள்ளனர்.

உலக கோப்பை இலக்கு

ஷுப்மன் கில் வெளியேற்றப்பட்டதால், சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா தொடக்க ஜோடி மீண்டும் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விருவரும் 2024-25 முழுவதும் அற்புதமான சாதனைகள் படைத்தனர். மேலும் இந்தியாவில் இந்த உலக கோப்பை நடைபெறுவதால் இந்திய அணிக்கு அதிக சாதகம் உள்ளது. கடந்த முறை நடைபெற்ற உலக கோப்பையில் இந்தியா அணி வெற்றி பெற்று இருந்தது. 2026 ஆண்டு இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு மிகவும் பிஸியான, சவாலான மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் T20 உலக கோப்பையில் டீம் இந்தியா தனது பட்டத்தை பாதுகாக்க களமிறங்கும்.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.