சிறுவர்கள் சமூக வலை தளங்களை பயன்படுத்த தடை; பிரான்ஸ் அரசு திட்டம்

பாரீஸ்,

சமூக வலைதளங்களை சிறுவர்கள் பயன்படுத்துவதால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள், சமூக வலைதளங்களை பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்தது. இந்த நிலையில் சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்க பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது.

அதிகப்படியான திரை நேரத்தில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க 15 வயதுக் குட்பட்டவர்களுக்கு சமூக ஊடக அணுகலுக்குத் தடை விதிக்க மசோதா முன்மொழிய பட்டுள்ளது. அதில் கட்டுப்படற்ற இணைய அணுகல் கொண்ட குழந்தைகள் பொருத்தமற்ற உள்ளடக்கத்திற்கு ஆளாகிறார்கள் என்றும், இணையவழித் துன்புறுத்தலுக்கு ஆளாகலாம் அல்லது அவர்களின் தூக்க முறைகளில் மாற்றங்களை அனுபவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இம்மாதம் பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற உள்ளது. இதற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.