நாகர்கோவில்: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்டத்தின்போதுர, இந்துக்களுக்கு எதிராக செயல்படும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுக்கு எதிராக அல்லேலூயா பாபு என இந்து அமைப்பை சேர்ந்தவர்களும், பொதுமக்களும் இணைந்து குரல் எழுப்பியதால், பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சேகர்பாபு அங்கிருந்து வெளியேறினார். குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் வடம்பிடித்து இழுத்தனர். தேர்த்திருவிழாவில், கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி, திருநெல்வேலி, தென்காசி, […]