சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஜனவரி 6ந்தேதி உருவாகும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், இதன் காரணமாக தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது. வடகிழக்குப் பருவமழை இன்னும் தமிழ்நாட்டிலிருந்து முழுமையாக விலகாத நிலையில், வங்கக்கடலில் உருவாகும் இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது வங்கக்கடல் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டலச் சுழற்சிகளால் தென் மாவட்டங்களில் மழை பெய்து வரும் […]