Kolkata Knight Riders Latest News: வங்கதேச நாட்டின் பிரச்சனையானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ஷேக் ஹசீனா ஆட்சி அகற்றப்பட்டது. இதன்பிறகு யூனுஸ் தலைமையில் ஒரு இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்த ஆட்சியில் ஹிந்து மதத்தை சேர்ந்தவர்கள் மீது குறிவைத்து வன்முறை அதிகரித்து வருகிறது. சமீபத்தில் தீபு சந்திர தாஸ் என்ற ஹிந்து மதத்தை சேர்ந்த ஒரிவர் அடித்து கொல்லப்பட்டார். அவரது உடலை தீ வைத்தும் எரித்தனர். இந்த கொடூர செயல் இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளின் மத்தியிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
Add Zee News as a Preferred Source
KKR Mustafizur Rahman – Bangladesh Controversy: முஸ்தஃபிசுர் ரஹ்மானுக்கு எதிர்ப்பு
இந்த நிலையில்தான், வங்கதேச வீரரை அணியில் சேர்ப்பது பொருத்தமற்றதாக இருக்கும் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாஜக சங்கீத் சோம் போன்ற இந்திய அரசியல் தலைவர்கள் ஷாருக்கானை கடுமையாக சாடி உள்ளனர். வங்கதேச வீரர்களுக்கு ஐபிஎல் போட்டிகளில் முழுமையாக தடை விதிக்க வேண்டும் என வாதிட்டு வருகின்றனர். ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வங்கதேச அணியின் முன்னணி வீரரான முஸ்தஃபிசுர் ரஹ்மானை சமீபத்தில் நடந்த ஐபிஎல் மினி ஏலத்தில் ரூ. 9 கோடிக்கு வாங்கினர். அவரை ஐபிஎல் தொடரில் விளையாட வைக்க கூடாது என சமூக வலைத்தளங்களில் BoycottKKR, Boycottipl போன்ற ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
Kolkata Knight Riders: என்ன செய்யப்போகிறது கொல்கத்தா நைட் ரைடஸ்
சிலர் முஸ்தஃபிசுர் ரஹ்மானுக்கு தடை விதிக்காத பட்சத்தில், அவர் கேகேஆர் அணிக்காக விளையாடினால், மைதானங்கள் சூறையாடப்படும் என்று கூறி வருகின்றனர். இந்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்த விவகாரம் தொடர்பாக கொல்கத்தா அணியோ அல்லது பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வ பதிலை அளிக்கவில்லை.
இது குறித்து பேசிய பிசிசிஐ அதிகாரி ஒருவர், இது போன்ற விஷயங்களில் நாம் ஜாக்கரத்தையாக இருக்க வேண்டும். நாங்கள் இந்த விவகாரத்தில் அரசுடன் தொடர்பில் உள்ளோம். வங்கதேச வீரரை தடை செய்ய வேண்டும் என்ற எந்த ஒரு தூண்டுகோளுக்கும் நாங்கள் செவி சாய்க்கவில்லை. எனவே அவருக்கு தடை விதிக்க வாய்ப்பில்லை. வங்கதேசம் ஒரு எதிரி நாடு அல்ல என கூறினார்.
KKR – CSK: சிக்கலில் கேகேஆர் – தப்பித்த சிஎஸ்கே
வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசுர் ரஹ்மான். இவர் அந்த அணிக்காக 121 டி20 போட்டிகளிலும் 112 ஒருநாள் போட்டிகள் மற்றும் 15 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். இதில் அவர் 358 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். இவர் ஐபிஎல்லில் 8 சீசன்களாக விளையாடி வருகிறார். 2024ஆம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி நல்ல செயல்திறனை வெளிப்படுத்தினார். பின்னர் கடந்த ஐபிஎல் சீசனில் டெல்லி அணியில் இருந்த நிலையில் அவர் கழட்டிவிடப்பட்டார். மினி ஏலத்தில் இவரை வாங்க கொல்கத்தா மற்றும் சென்னை அணி இடையே கடும் போட்டி நிலவியது. விலை அதிகரித்துக்கொண்டே சென்றதால் சிஎஸ்கே அணி ஒரு கட்டத்தில் முஸ்தஃபிசுரை எடுக்கும் முயற்சியை கைவிட்டது. இறுதியில் கேகேஆர் அணி ரூ. 9.2 கோடிக்கு வாங்கியது. இந்த சூழலில்தான், கோடி கணக்கில் கொட்டிய வீரருக்கு எதிர்ப்பு வந்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சிக்கல் மாட்டி உள்ளது. இதுவரை எதிர்ப்புக்கு எந்த அதிகாரப்பூர்வ பதிலையும் அளிக்காத அந்த அணி என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
About the Author
R Balaji