CSK Latest News: இந்தியாவில் தற்போது விஜய் ஹசாரே டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் பல வீரர்கள் விக்கெட் மற்றும் ரன்களை குவித்து அசத்தி வருகின்றனர். அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 2026 ஐபிஎல் மினி ஏலத்தில் எடுக்கப்பட்ட சர்பராஸ் கான் ஒரு போட்டியில் 75 பந்துகளில் 157 ரன்கள் எடுத்து அசத்தி இருக்கிறார்.
Add Zee News as a Preferred Source
Sarfaraz Khan Performance In Vijay Hazare Trophy: விஜய் ஹசாரே டிராபியில் அசத்தும் சர்பராஸ் கான்
விஜய் ஹசாரே டிராபி தொடரில் சர்பராஸ் கான் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். மும்பை அணி சமீபத்தில் கோவா அணியுடன் மோதியது. இப்போட்டியில் ஷர்துல் தாக்கூர் தலைமையிலான மும்பை அணியே முதலில் பேட்டிங் செய்தது. இந்த நிலையில்தான் சிஎஸ்கேவால் எடுக்கப்பட்ட சர்பராஸ் கான் ருத்ரதாண்டவம் ஆடி உள்ளார். 50 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 444 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக சர்பராஸ் கான் 75 பந்துகளில் 14 சிக்சர்கள், 9 பவுண்டரிகள் உட்பட மொத்தம் 157 ரன்கள் குவித்துள்ளார். இது ரசிகர்களை மத்தியில் மகிழ்ச்சியை ஈர்த்துள்ள நிலையில், சிஎஸ்கே அணியையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.
கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என அனைவரும் சர்பராஸ் கானுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை மினி ஏலத்தில் வாங்கிய நிலையில், அவருக்கு பிளேயிங் 11ல் கண்டிப்பாக இடம் இருக்காது என்றுதான் பேசப்பட்டு வந்தது. இந்த சூழலில், மிடில் ஆர்டரில் களமிறங்கி அவர் ஆடிய ஆட்டம் தற்போது அவரை கண்டிப்பாக பிளேயிங் 11ல் சேர்க்க வேண்டும் என கூறி வருகின்றனர். இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும் முன்னாள் சிஎஸ்கே அணி வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின், சிஎஸ்கே பிளேயிங் 11ல் சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
CSK Should Give A Chance to Sarfaraz Khan: சர்பராஸ் கானுக்கு கண்டிப்பாக வாய்ப்பளிக்க வேண்டும்
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளதாவது, சையத் முஷ்டாக் அலி தொடரில் இருந்த ஃபார்மை அப்படியே விஜய் ஹசாரே டிராபி தொடரில் தொடர்ந்து வருகிறார் சர்ஃப்ராஸ் கான். அதுவும் மிடில் ஆர்டரில் களமிறங்கி அவர் தனது ஸ்வீப்கள் மற்றும் ஸ்லாக் ஸ்வீப்கள் மூலம் சுழல் பந்துகளை கொலை செய்து வருகிறார். அவர் தனக்கான இடத்திற்காக கதவை தட்டவில்லை. அடிச்சு உடைத்து இருக்கிறார்.
சர்பராஸ் கானின் இந்த ஃபார்மை சிஎஸ்கே அணி பயன்படுத்தி கொள்ள வேண்டும். அவருக்கு பிளேயிங் XIIல் இடம் அளிக்க வேண்டும். புரிந்து கொள்ள முடிகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏராளமான பேட்டர்கள் உள்ளனர். 2026 ஐபிஎல்லுக்காக காத்திருக்கின்றேன் என பதிவிட்டுள்ளார்.
CSK Sarfaraz Khan: பிளேயிங் 11ல் இடம் அளிக்க முடியுமா?
ரவிச்சந்திரன் அஸ்வின் கூறுவது போல சிஎஸ்கே அணியில் ஏராளமான பேட்டர்கள் இருக்கின்றனர். தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன், மாத்ரே, பின்னர் ருதுராஜ் கெய்க்வாட், டெவால்ட் ப்ரிவீஸ், சிவம் துபே என பலரும் இருக்கின்றனர். அதனால் சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு அளிப்பது கடினமே. முதல் சில போட்டிகளில் இல்லை என்றாலும், சிஎஸ்கே அணியால் பின்னர் அவருக்கு வாய்ப்பு அளிக்க முடியும். சிஎஸ்கே அணி பிளேயிங் 11ல் தற்போது தனக்கான இடத்தை பிடித்திருப்பவர்களில் யாரேனும் சரியாக பேட்டிங் செய்யவில்லை என்றால் அப்போது சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு வழங்கலாம். பலரின் கருத்துக்கள் என்னவாக இருந்தாலும், ஐபிஎல் போட்டிகளின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முடிவுதான் இறுதியானது. எனவே அவர்கள் என்ன செய்ய காத்திருக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
CSK Full Squad For IPL 2026: 2026 ஐபிஎல்லுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஆயுஷ் மத்ரே, எம்.எஸ். தோனி, சஞ்சு சாம்சன், டெவால்ட் ப்ரீவிஸ், உர்வில் படேல், ஷிவம் துபே, ஜேமி ஓவர்டன், ராமகிருஷ்ண கோஷ், நூர் அகமது, கலீல் அகமது, அன்ஷுல் கம்போஜ், குர்ஜப்னீத் சிங், ஷ்ரேயாஸ் கோபால், முகேஷ் சவுத்ரி, நாதன் எல்லிஸ், அகேல் ஷர்மான், பிரஷாந்த் ஷர்மான், பிரஷாந்த் ஷர்மான், சர்பராஸ் கான், மாட் ஹென்றி, ராகுல் சாஹர், சாக் ஃபௌல்க்ஸ்.
About the Author
R Balaji