சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘தலைவர் 173’ படத்தின் இயக்குநராக சிபி சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், 2026 ஜனவரி 3ஆம் தேதி, சமூக வலைதளங்களில் வெளியிட்டது. அறிவிப்புடன் வெளியிடப்பட்ட போஸ்டரில் “Every family has a hero” (ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு நாயகன் இருப்பான்) என்ற வரி இடம் பெற்றுள்ளது. […]