லீக்கானது Samsung Galaxy S26 Ultra வெளியீட்டு தேதி: மிரட்டலான அம்சங்களுடன் தயார்

Samsung Galaxy S26 Ultra Launch Date: நீங்கள் ஒரு சாம்சங் ரசிகராக இருந்து, கேலக்ஸி S26 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறீர்கள் என்றால், இந்த செய்தியி படுக்கவும். சாம்சங்கின் வரவிருக்கும் முதன்மையான கேலக்ஸி S26 அல்ட்ரா தொடர்பான முக்கிய விவரங்கள் சசிந்துள்ளன. கசிந்துள்ள புதிய தகவலின்படி, கேலக்ஸி S26 தொடர் ஜனவரி மாதத்தில் அல்ல, பிப்ரவரி 2026 இல் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த போனின் வண்ண விருப்பங்கள் மற்றும் கேமரா பற்றிய விவரங்களும் தற்போது கசிந்துள்ளதால், அவற்றி விவரத்தை இங்கே காணலாம்.

Add Zee News as a Preferred Source

பிப்ரவரியில் நடைபெறும் Galaxy Unpacked நிகழ்வு

Ice Universe என்கிற டிப்ஸ்டர் படி, சாம்சங் நிறுவனம் பிப்ரவரி 25, 2026 அன்று நடைபெறும் Galaxy Unpacked நிகழ்வில் Samsung Galaxy S26 தொடரை வெளியிடும். இந்த நிகழ்வு அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. 2026-ஆம் ஆண்டின் Galaxy S வெளியீட்டுத் தேதி மற்றும் இடம் குறித்து இவ்வளவு தெளிவான தகவல்கள் வெளியாவது இதுவே முதல்முறை. சாம்சங் நிறுவனம் கடந்த மூன்று Galaxy S அறிமுகங்களையும் இதே பகுதியில் நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Galaxy S26 வெளியீட்டு காலவரிசையில் முக்கிய மாற்றம்

Galaxy S25 தொடர் கடந்த ஆண்டு ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் Galaxy S26 வெளியீட்டு காலவரிசையில் (Launch Timeline) ஒரு முக்கியமான மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிக்கைகளின்படி, நிறுவனம் இந்த முறை AI அம்சங்களில் பெரிய மாற்றங்களைச் செய்து வருகிறது, இது வெளியீட்டில் தாமதத்திற்கு வழிவகுத்தது என்று கூறப்படுகிறது. இதனால் வரவிருக்கும் Galaxy S26 சீரிஸ் ஒரு மாதம் தாமதமாக, அதாவது பிப்ரவரி 25, 2026 அன்று அறிமுகமாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பிப்ரவரி இறுதியில் அறிமுகம் செய்யப்படுவதால், இந்த போன்களின் விற்பனை மார்ச் 2026 முதல் வாரத்தில்தான் தொடங்கும் எனத் தெரிகிறது.

Galaxy S26 Ultra எப்போது சந்தையில் அறிமுகமாகும்?

சாம்சங்கின் கடந்த ஐந்து முதன்மை வெளியீட்டு நிகழ்வுகளைப் பார்க்கும்போது, ​​போன்கள் பொதுவாக Unpacked செய்யப்பட்ட 14 முதல் 16 நாட்களுக்குப் பிறகு விற்பனைக்கு வந்துள்ளது. அதன்படி பிப்ரவரி 25 ஆம் தேதி Galaxy S26 Ultra அறிமுகப்படுத்தப்பட்டால், மார்ச் 13, 2026 தேதிகளில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விலை தொடர்பான சமீபத்திய புதுப்பிப்பு என்ன?

சாம்சங் நிறுவனம் தனது Galaxy S26 தொடரின் விலையை உயர்த்தப்போவதில்லை என்று தெரிகிறது. Maeil Business வெளியிட்டுள்ள செய்தியின்படி, 256GB சேமிப்பக வசதி கொண்ட அனைத்து Galaxy S26 மாடல்களும், கடந்த கால Galaxy S25 தொடரின் அதே ஆரம்ப விலையிலேயே நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தகவல் உண்மையானால், உலகளாவிய சந்தையில் Galaxy S26 $799 முதல், Galaxy S26 Plus $999 முதல் மற்றும் Galaxy S26 Ultra: $1,299 முதல் இருக்கக்கூடும்.

இருப்பினும், இந்தியாவில் இதன் அதிகாரப்பூர்வ விலை மற்றும் வரி விதிப்புகள் குறித்த விவரங்கள், போன் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே உறுதியாகத் தெரியும்.

சமீபத்தில் Galaxy Z Tri-fold போன்ற புதிய தயாரிப்புகளில் நிறுவனம் நிதி ரீதியான சவால்களைச் சந்தித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இருப்பினும், அதிக விற்பனையாகும் Galaxy S சீரிஸ் போன்களின் விலையை உயர்த்துவது வணிக ரீதியாகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், நிறுவனம் அந்த முடிவைத் தவிர்க்கிறது. இந்த நிதி இழப்பைச் சமன் செய்ய, சாம்சங் தனது நடுத்தர வர்க்க போன்களான ‘A-சீரிஸ்’ (Galaxy A-series) ஸ்மார்ட்போன்களின் விலையைச் சற்றே உயர்த்துவது குறித்துப் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

நான்கு வண்ணங்களில் அறிமுகப்படுத்தலாம்

இந்த முறை Samsung Galaxy S26 Ultra புதிய மற்றும் பிரீமியம் வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்படலாம். அறிக்கைகளின்படி, நிறுவனம் Black Shadow, White Shadow, Galactial Blue மற்றும் UltraViolet ஆகிய வண்ண விருப்பங்களுடன் வெளியிடப்படலாம். இவை அனைத்தும் இயற்கையான கருப்பு, வெள்ளை, நீலம் மற்றும் வயலட் டோன்களை அடிப்படையாகக் கொண்டவை. இந்த புதிய வண்ணங்கள் Galaxy S26 Ultra ஐ முன்பை விட மிகவும் தனித்துவமாகவும் பிரீமியமாகவும் தோற்றமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author


Vijaya Lakshmi

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.