Sarvam Maya: "அப்பவை அப்படி முத்திரை குத்துவது தவறானது!" – சத்யன் அந்திக்காடின் மகன் அகில் சத்யன்

மலையாள சினிமாவின் சீனியர் இயக்குநரான சத்யன் அந்திக்காடின் மகன் அகில் சத்யன் இயக்கத்தில் திரைக்கு வந்திருக்கிறது ‘சர்வம் மாயா’ திரைப்படம்.

நிவின் பாலி நடித்திருக்கும் இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்லதொரு வரவேற்பு கிடைத்து வருகிறது.

Sarvam Maya Movie
Sarvam Maya Movie

இப்படத்திற்கான புரமோஷனுக்காக அளித்த பேட்டி ஒன்றில், தன் தந்தை மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்துப் பேசியிருக்கிறார் அகில் சத்யன்.

அந்தப் பேட்டியில் அவர், “பலர் 1990கள்தான் அப்பாவின் உச்ச காலம் என்கின்றனர். ஆனால், ‘மனசினக்கரே’, ‘வினோதயாத்ரா’, ‘ஒரு இந்தியன் பிரணயகதா’, ‘ஞான் பிரகாஷன்’, ‘அச்சுவின்டே அம்மா’ போன்ற படங்கள் அனைத்தும் 2000க்குப் பிறகு வெளியானவைதான்.

அப்பாவை வழக்கமான ‘கிராமப்பட’ இயக்குநர் என முத்திரை குத்துவது தவறான சிந்தனை.

அப்படிப்பட்ட படங்களை அப்பா எடுத்து 15 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. அதை விக்கிபீடியாவையாவது பார்த்துக்கொள்ளுங்கள். தந்தைக்குச் சமகாலப் பொருத்தம் இல்லை என்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

இந்த ஆண்டில் (2025) 100 கோடி வசூல் படங்களில் ஒன்றான ‘ஹ்ருதயபூர்வம்’ படத்தை அப்பாதான் இயக்கியுள்ளார். இது சாதனை.

Sathyan Anthikad - Hridyapoorvam
Sathyan Anthikad – Hridyapoorvam

அப்பா சினிமாவுக்குள் வந்த காலத்தில் மலையாள சினிமா கருப்பு-வெள்ளை காலத்தில்தான் இருந்தது.

அந்தச் சினிமாவின் வளர்ச்சியோடு சேர்ந்து வளர்ந்தவர் அவர். குறைந்த வெற்றிகளைக் கொடுத்த இயக்குநர்களைக் கொண்டாடுகிறார்கள். என் தந்தை பெரிய அளவில் கவனிக்கப்படாமல் இருக்கிறார்.

அவர்கள் எடுத்த படங்களைவிட மூன்று மடங்கு அதிகமான படங்களை அப்பா இயக்கியிருக்கிறார். அதில் பல படங்கள் மெகா ஹிட்ஸ்.

58 படங்களை இயக்கி, பெரும்பாலானவை ஹிட்ஸ் கொடுத்த ஒரு லெஜண்டின் மகன்கள் என்ற அடையாளம் அனூப் சத்யனுக்கும் (அகில் சத்யனின் சகோதரர்) எனக்கும் எப்போதும் இருக்கும்” எனக் கூறியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.