அமெரிக்காவில் ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதி உயிரிழந்துள்ளனர். அவர்களுடன் பயணித்த இரண்டு குழந்தைகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த கோட்டிகலபுடி கிருஷ்ண கிஷோர் (45) மற்றும் அவரது மனைவி ஆஷா (40). இருவரும் மேற்கு கோதாவரி மாவட்டம் பாலக்கொள்ளு நகரைச் சேர்ந்தவர்கள். கிருஷ்ண கிஷோர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார். 10 நாட்களுக்கு முன் தனது குடும்பத்தினருடன் பாலக்கொள்ளு வந்த […]