அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலம் கொலம்பியாவில், புத்தாண்டு தினத்தில் காணாமல் போனதாக கூறப்பட்ட 27 வயதான இந்திய இளம்பெண் நிகிதா கோடிஷாலா, தனது முன்னாள் காதலனின் குடியிருப்பில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த கொலையை செய்ததாக நிகிதாவின் முன்னாள் காதலன் அர்ஜுன் சர்மா (26) மீது போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். கொலை செய்த பிறகு, அவர் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளார் என்று PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மருத்துவத் துறை நிபுணரான நிகிதா, மருந்தியல், […]