சட்டவிரோத தகவல், படங்கள் பதிவிட்டால் தடை: பயனர்களுக்கு எக்ஸ் தளம் எச்சரிக்கை

புதுடெல்லி,

எலான் மஸ்கின் எக்ஸ் ஏ.ஐ. நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது கிரோக் ஏ.ஐ. பிரபல சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்துடன் இணைக்கப்பட்டு கிரோக் ஏ.ஐ. செயல்படுகிறது. எக்ஸ் தள பயனர்கள் சிலர் கிரோக் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெண்கள் மற்றும் சிறுமிகளின் புகைப்படங்களை சட்டவிரோதமாக ஆபாசமாக மாற்றி வருகின்றனர். மேலும் அவற்றை எக்ஸ் தளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வரவே அது வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார். அப்போது எக்ஸ் தளத்தின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தும் இதுகுறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டார்.

இந்தநிலையில் எக்ஸ் தளம் கிரோக் ஏ.ஐ.யை பயன்படுத்தி பெண்களின் ஆபாச படங்கள், பாலியல் ரீதியான படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை உருவாக்கியவர்களின் கணக்குகளை தெரிவு செய்து அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதற்கு 72 மணிநேரம் கெடு விதிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், இது தொடர்பாக எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குரோக் ஏஐ செயலியை பயன்​படுத்​துபவர்​கள் சட்​ட​விரோத தகவல்​கள் மற்​றும் படங்​களை பதிவேற்​றம் செய்​தால் கடும் விளைவு​களை சந்​திக்க நேரிடும். சட்​ட​விரோத தகவல்​கள், படங்​கள், வீடியோக்​களை பதிவேற்​றும் செய்​பவர்​களின் கணக்​கு​களுக்கு நிரந்​தர​மாக தடை விதிக்​கப்​படும்” என்று எச்சரித்துள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.