Shikhar Dhawan Latest News: இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவான். இவர் இந்திய அணிக்காக பல சாதனைகளை படைத்திருக்கிறார். குறிப்பாக ஐசிசி தொடர்களில் இவரது பங்களிப்பு என்பது மிகவும் பெரியது. கடந்த 2010ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடிய ஷிகர் தவான் 2020ஆம் ஆண்டுக்கு பின்னர் அவருக்கு சரிவர வாய்ப்பு கிடைக்கவில்லை. இளம் வீரர்கள் அவரது இடத்தை நிரப்பினர். ஷிகர் தவார் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று வந்தார். பின்னர் 2024ஆம் ஆண்டில் அதில் இருந்து வெளியேறினார்.
Add Zee News as a Preferred Source
Shikhar Dhawan – Ayesha Mukherjee Divorce: முதல் மனைவி ஆயிஷா முகர்ஜியுடன் விவாகரத்து
2020ஆம் ஆண்டுக்கு பின்னர் கிரிக்கெட் வாழ்க்கையில் சரிவை கண்ட ஷிகர் தவான், தனிப்பட்ட வாழ்க்கையிலும் சோகத்தை அனுபவித்தார். அவர் 2023ஆம் ஆண்டு அவரது மனைவி ஆயிஷா முகர்ஜியிடம் இருந்து விவாகரத்தை பெற்றுக் கொண்டார். ஆயிஷா முகர்ஜியை ஷிகர் தவான் 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து நன்றாக சென்று கொண்டிருந்த திடீரென அவர்களின் திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், இருவரும் 2023ல் விவாகரத்து செய்துகொண்டனர்.
Shikhar Dhawan Latest News: இரண்டாவது திருமணம் செய்ய இருக்கும் ஷிகர் தவான்
இந்த நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான். இரண்டாவதாக திருமணம் செய்ய இருக்கிறார். ஷிகர் தவான் முன்னாள் மனைவி ஆயிஷா முகர்ஜியை பிரிந்த பின்னர் சோஃபி ஷைன் என்ற பெண்ணுடன் நெருக்கமாக பழகி வந்தார். சமீபத்தில் கூட இவர்கள் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் வைரலானது. 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருவரும் முதன்முதலாக பொதுவெளியில் ஒன்றாக காணப்பட்டனர். முதலில் இவர்கள் நண்பர்களாக பழகி வந்த நிலையில், பின்னர் காதலராக மாறினர். இந்த நிலையில்தான் இருவரும் திருமணம் செய்துக்கொள்ள இருக்கின்றனர்.
Shikhar Dhawan Second Marriage: பிப்ரவரியில் திருமணம்?
இந்த திருமணம் பிப்ரவரி மாதத்தில் நடக்க இருப்பதாகவும் இந்த திருமணம் டெல்லி என்சிஆர் பகுதியில் நடைபெற இருப்பதாகவும் தகவல்வெளியாகி இருக்கிறது. இந்த திருமண விழாவிற்கு ஷிகர் தவான் மற்றும் சோஃபி ஷைனின் நெருங்கிய வட்டாரங்கள் மட்டுமே கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
Shikhar Dhawan – Sophie Shine: ஷிகர் தவான் – சோஃபி ஷைன்
சோஃபி ஷைன் அமெரிக்காவை சேர்ந்தவர். இவர் நிதி நிறுவனமான நார்தர்ன் டிரஸ்ட் கார்ப்பரேஷனில் இரண்டாம் துணை தலைவராக இருக்கிறார். ஷிகர் தவான் டா ஒன் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் தொண்டு பிரிவான ஷிகர் தவான் ஃபவுண்டேஷன் அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
About the Author
R Balaji