Mohammed Siraj Latest News: இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டின் முதல் தொடராக நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இதையடுத்து பிப்ரவரி மாதத்தில் தொடங்க இருக்கும் டி20 உலகக் கோப்பையிதான் பங்கேற்கிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி வென்றது. அதனை இம்முறை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று இந்திய வீரர்கள் அதற்காக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
Add Zee News as a Preferred Source
Mohammed Siraj: இடம்பெறாத முகமது சிராஜ்
இத்தொடருக்கான அணி கடந்த 20ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு அறிவித்த இந்த அணியில் துணை கேப்டனாக இருந்த சுப்மன் கில் இடம் பெறவில்லை. அந்த அணிக்கு மீண்டும் அக்சர் படேல் துணை கேப்டனாக வந்துள்ளார். இதனால் சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக களமிறங்குவது உறுதியாகி உள்ளது. பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ள நிலையில், இந்திய அணியின் முக்கிய பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருக்கும் முகமது சிராஜ் இடம் பெறவில்லை.
Mohammed Siraj: டி20 உலகக் கோப்பையில் முகமது சிராஜ் இடம் பெறாதது ஏன்?
இது ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் இடையே ஏமாற்றத்தையும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியது. இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் முகமது சிராஜ் இடம் பெறாதது ஏன் என்ற காரணம் குறித்த தனது கருத்தை தெரிவித்திருக்கிறார் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ். இது தொடர்பாக தனது யூடியூப் சேனலில் பேசிய அவர், டி20 உலகக் கோப்பையில் முகமது சிராஜ் இடம் பெறாதது துரதிர்ஷ்டவசமானது. ஆனால் இது அணியின் சமநிலை காரணமாக எடுக்கப்பட்ட முடிவாக நான் பார்க்கிறேன்.
Harshit Rana: பேட்டிங்கிலும் பங்களிக்கும் ஹர்ஷித் ராணா
உங்களிடம் ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் உள்ளனர். ஹர்ஷித் ராணாவும் இருக்கிறார். அவர் பேட்டிங்கையும் கையாள்கிறார். முகமது சிராஜ் பந்து வீச்சில் மட்டுமே கலக்குவார். பேட்டிங்கில் பங்களிப்பை கொடுக்க மாட்டார். அதனாலேயே ஹர்ஷித் ராணாவிடம் தேர்வுக்குழு சென்றது என நினைக்கிறேன். அதேசமயம், இந்திய அணி நிர்வாகம் சுழற்பந்து வீச்சாளர்களையே அதிகம் விரும்பவதாக நான் நினைக்கிறேன். வேகப்பந்து வீச்சாளர்கள் ஆட்டத்தின் தொடக்கத்தில் விக்கெட்களை வீழ்த்தினால் போதுமானது. அதுவே கூடுதல் பலமாக கருதுகின்றனர்.
2027 ODI World Cup: 2027 ஒருநாள் உலக கோப்பை திட்டங்களில் முகமது சிராஜ்
முகமது சிராஜ் 2024ஆம் ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் முக்கிய பங்கு வகித்திருந்தார். அவர் 16 விக்கெட்களை வீழ்த்தி சிறப்பான பங்களிப்பை கொடுத்திருந்தார். ஆனால் அவர், 2025ஆம் ஆண்டில் எந்த சர்வதேச டி20 போட்டியிலும் விளையாடவில்லை. டி20 போட்டிகளில் அவர் இடம் பெறாவிட்டாலும், தொடர்ந்து அவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளில் அங்கம் வகித்து வருகிறார். 2027 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் திட்டங்களில் அவர் உள்ளார் என ஏபி டிவில்லியர்ஸ் கூறினார்.
T20 World Cup India Squad: 2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், சிவம் துபே, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, வருண் சகரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங்.
About the Author
R Balaji