சென்னை,
இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் விராட் கோலி. இவர் 2008-ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானதிலிருந்து, சுமார் 17 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். சமீபத்தில் டி20 மற்றும் டெஸ்ட் வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர் , ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறார்.
விரைவில் நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடரில் விளையாட இருக்கும் விராட் ஒரு மாபெரும் சாதனைகளை முறியடிக்க காத்திருக்கிறார்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வீரராக சச்சின் டெண்டுல்கர் முதல் இடத்தில் உள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிராக மட்டும் 42 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய சச்சின் 46 ரன்கள் சராசரியுடன் 1750 ரன்களை குவித்துள்ளார்.
அதே வேளையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 33 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 6 சதம் மற்றும் 9 அரைசதம் 1657 ரன்களை குவித்துள்ளார். இதன் காரணமாக இந்த தொடரில் மேலும் 94 ரன்கள் அடித்தால் சச்சினின் அந்த சாதனையை விராட் கோலி முறியடிப்பார்.