'மகாநதி' சீரியலில் கம்ருதீன் மீண்டும் வர வாய்ப்புள்ளதா? – சீரியல் தரப்பின் பதில் இதுதான்!

‘பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு மூலம் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து கம்ருதீன் முன்பு நடித்து வந்த ‘மகாநதி’ சீரியலில் இருந்தும் வெளியேற்றப் பட்டுவிட்டார்’

கம்ருதீன் குறித்து இப்படியொரு தகவல் இரண்டு மூன்று தினங்களாக பரவி வருகிறது.

ஒரு சம்பவம் நடந்தால் அதையொட்டிய கிளைத் தகவல்கள் தாறுமாறாகப் பரவுதை இந்த டிஜிட்டல் யுகத்தில் தடுக்க இயலாது.

எனவே உண்மை நிலவரம் தெரிய ‘மகாநதி’ சீரியலின் யூனிட்டிலேயே பேசினோம்.

Mahanadhi Serial

”அந்த சீரியலில் கம்ருதீன் நடிச்சிட்டிருந்தார். அவருடைய கேரக்டரை முக்கியமான ஒரு துணைக் கதாபாத்திரம்னு சொல்லலாம். பிக்பாஸ் நிகழ்ச்சியில கலந்துக்க அவருக்கு வாய்ப்பு வந்த போது ‘எங்க யூனிட்ல இருந்து ஒருத்தர் போறதுல‌ எங்களுக்கு சந்தோஷம்கிறதால உற்சாகமா அனுப்பி வச்சோம்.

அந்த ஷோவுல அவர் எப்படி ஆடுவார், எவ்வளவு நாள் இருப்பார்ங்கிறதெல்லாம் யாருக்கும் தெரியாதுங்கிறதால அவருடைய கேரக்டரை தற்காலிகமா வெளிநாடு போற மாதிரி காட்டியிருப்போம்.

அவர் அந்த நிகழ்ச்சியில் நல்லா விளையாண்டதால ஓரிரு வாரத்துல திரும்ப வாய்ப்பில்லைனு தெரிஞ்சது. அதனால சேனல் தரப்புல டிஸ்கஸ் பண்ணினப்ப, ‘ஆள் மாத்தறதா இருந்தா மாத்திக்கோங்க’னு கூடச் சொல்லிட்டாங்க. ஆனாலும் வேற ஆர்ட்டிஸ்ட் கமிட் செய்யாம வெளிநாட்டுல செட்டில் அகிட்ட மாதிரி காமிச்சு கேரக்டர் முடிக்கப்பட்டுச்சு.

கமருதீன்

அதனால ‘பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப் பட்டது போல ‘மகாநதி’ தொடரிலிருந்தும் அவர் இப்பதான் விலக்கி வைக்கப்பட்டுள்ளார்’ங்கிற ரீதியில தகவல் பரவுறது. உண்மை நிலை இதுதான்’ என்றார்கள் அவர்கள்.

‘ஒருவேளை மீண்டும் தொடருக்குள் கம்ருதீன் வர வாய்ப்புள்ளதா’ என்ற கேள்விக்கு, ‘இப்ப கதை வேற ட்ராக் மாறி போயிட்டிருக்கறதால, அப்படி எதுவும் நடக்க வாய்ப்பில்லை’ என்பதே அவர்களின் பதில். எனினும் ரெட் கார்டுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்கிறார்கள்.!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.