Ruturaj Gaikwad Latest News: இந்தியா – நியூசிலாந்து இடையேயான ஒருநாள் தொடர் வரும் 11ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இத்தொடருக்கான இந்திய அணி ஜனவரி 03ஆம் தேதி தேர்வுக் குழுவால் அறிவிக்கப்பட்டது. இதில் ருதுராஜ் கெய்கவாட் இடம் பெறுவார் என மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு இடம் அளிக்கவில்லை. ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் தேர்வாகினர்.
Add Zee News as a Preferred Source
IND vs NZ Shreyas Iyer: இந்திய அணிக்கு திரும்பிய ஸ்ரேயாஸ் ஐயர்
கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியா தொடரின்போது இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் அணியை விட்டு விலகி சிகிச்சை எடுத்த நிலையில், கடந்த இரண்டு மாதங்கள் ஓய்வு இருந்தார். இந்த சூழலில், தற்போது இந்த நியூசிலாந்து தொடரின் மூலம் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பி உள்ளார். ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் இதற்கிடையில் எந்த போட்டியிலும் விளையாடவில்லை. பிசிசிஐ, “உள்ளூர் போட்டிகளில் விளையாடி நிரூபித்தால் மட்டுமே அணியில் இடம் கிடைக்கும்” என கூறி இருந்தது.
Ruturaj Gaikwad Batting Form: தொடர்ந்து அசத்தி வரும் ருதுராஜ் கெய்க்வாட்
ஒருநாளை ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளூர் போட்டிகளில் சொதப்பினார் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு அளிக்கும் நிலை இருந்தது. முன்னதாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக இடம் பிடித்த ருதுராஜ் கெய்க்வாட் சதம் அடித்து அசத்தினார். அதுமட்டுமல்லாமல் தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே டிராபி தொடரிலும் சதம் அடித்து முரட்டு ஃபார்மில் இருந்து வருகிறார். இதன் காரணமாக ஒருவேளை ஸ்ரேயாஸ் ஐயர் சொதப்பினால் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.
Shreyas Iyer: ஸ்ரேயாஸ் ஐயரால் பறிபோன வாய்ப்பு
இந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் தனது உடற்தகுதியை நிரூபிப்பதற்காக நேற்று (ஜனவரி 06) விஜய் ஹசாரே போட்டியில் கலந்து கொண்டு விளையாடினார். இமாச்சலப் பிரதேச அணிக்கு எதிரான அந்த போட்டியில் அவர் 53 பந்துகளில் 82 ரன்களை குவித்து அசத்தினார். ஸ்ரேயாஸ் ஐயரின் இந்த ஆட்டம் மொத்தமாக மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் ருதுராஜ் கெய்க்வாட் விஷயத்தில் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் இந்த அதிரடியான ஆட்டத்திற்கு பின்னர் அவர் இந்திய அணியுடன் விரைவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முரட்டு ஃபார்மில் இருந்தும் வேஸ்ட்
ருதுராஜ் கெய்க்வாட் தென்னாப்பிரிக்கா தொடரில் சதம் அடித்தது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனால் அவர் நியூசிலாந்து ஒருநாள் தொடரில் இடம் பிடித்தால் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
India Squad For New Zealand ODI Series: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி
சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்)*, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் சிங், ஜவால் ரெட்டி.
About the Author
R Balaji