நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் அணியிலிருந்து நீக்கப்பட்ட, சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் வரலாற்று சாதனை படைத்து உள்ளார். இன்று நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபியில் 15வது சதத்தை அடித்து சாதனை படைத்துள்ளார். ஜெய்ப்பூரில் கோவாவுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில், மகாராஷ்டிரா அணி மோசமாக விளையாடியது. வெறும் 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து அணி தடுமாறியது. இந்த சமயத்தில் நம்பர் 5ல் களமிறங்கிய ருதுராஜ், தனி ஒருவராக அணியை காப்பாற்றினார். அணியின் நிலைமையை புரிந்து கொண்டு நிதானமாக ஆடிய அவர் 131 பந்துகளில் 134 ரன்கள் அடித்தார். 8 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உட்பட சிறப்பாக விளையாடினார் ருதுராஜ். இறுதியில் மகாராஷ்டிரா அணி 50 ஓவர் முடிவில் 249/7 ரன்கள் அடித்து இருந்தது.
Add Zee News as a Preferred Source
RUTURAJ GAIKWAD SMASHED 134* (131) IN THE VIJAY HAZARE TROPHY.
– Maharashtra were 52/6 at one stage, then the captain stepped up.
Rutu, despite playing such crucial knocks, will be ignored by the selectors. pic.twitter.com/Wj2RZto3U3
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 8, 2026
வரலாற்று சாதனை
இது விஜய் ஹசாரே டிராபியில் ருதுராஜின் 15வது சதமாகும். இதன் மூலம் விஜய் ஹசாரே வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை சமன் செய்துள்ளார். விஜய் ஹசாரே டிராபியில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பின்வருமாறு. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ருதுராஜ் இந்த சாதனையை வெறும் 59 இன்னிங்ஸ்களில் எட்டியுள்ளார்.
– ருதுராஜ் கெய்க்வாட் – 15 (59 இன்னிங்ஸ்)
– அன்கீத் பவானே – 15 (94 இன்னிங்ஸ்)
– தேவ்துத் படிக்கல் – 14 (35 இன்னிங்ஸ்)
– மயாங்க் அகர்வால் – 13
List A கிரிக்கெட்டில் புதிய சாதனைகள்
ருதுராஜ் இதன் மூலம் List A கிரிக்கெட்டில் 20வது சதத்தையும் அடித்துள்ளார். வெறும் 95 இன்னிங்ஸ்களில் 20 சதங்களை எட்டி, உலக அளவில் சாதனை படைத்துள்ளார். மேலும், இந்த இன்னிங்ஸில் சதம் அடித்ததன் மூலம் List Aல் 5000 ரன்களை கடந்துள்ளார். கடந்த மாதம் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தனது முதல் ஒருநாள் சதத்தை அடித்த ருதுராஜ், நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 15 பேர் அணியில் இடம் பெறவில்லை. ஜனவரி 11 முதல் பரோடாவில் தொடங்கும் இந்த தொடருக்கு துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் காயத்திலிருந்து திரும்பியதால், ருதுராஜ் நீக்கப்பட்டுள்ளார்.
அஸ்வினின் ஆதரவு
“ருதுராஜ் கெய்க்வாட்டை அணியில் சேர்க்க முடியுமா? அது சாத்தியம் என்று நான் நினைக்கிறேன். விவாதத்திற்குரிய ஒரே இடம் பந்த் மற்றும் கெய்க்வாட் இடையே” என்று அஸ்வின் தனது யூடியூப் சேனலில் தெரிவித்தார். முன்னாள் இந்திய வீரர் சடகோபன் ராமேஷ், “நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக ருதுராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம். நிதிஷ் குமார் ரெட்டியின் பங்கு தற்போது தெளிவாக வரையறுக்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணி
இந்திய ஒருநாள் அணி: சுப்மன் கில் (C), ரோஹித் சர்மா, விராட் கோலி, KL ராகுல் (WK), ஷ்ரேயாஸ் அய்யர் (VC)*, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், ரிஷப் பந்த் (WK), நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால்
About the Author
RK Spark