ஜனநாயகன்: "பின்னடைவுகள் உங்களை எப்போதும் தடுத்ததில்லை அண்ணா" – விஜய்க்கு சிம்பு, வெங்கட் பிரபு ஆதரவு

விஜய் தன் கடைசி படமாக அறிவித்திருக்கும் ‘ஜன நாயகன்’ பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கத் தாமதமானதால் தயாரிப்பு நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்திருந்தது.

நேற்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. இந்த விவகாரத்தில் ஜனவரி 9 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி பி.டி ஆஷா அறிவித்திருந்தார்.

ஜனநாயகன்
ஜனநாயகன்

இதனைத்தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதியைத் தள்ளிவைப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

சென்சார் சான்றிதழ் கிடைக்கத் தாமதமாவது எல்லாம் அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் செயல் என்று சிலர் விமர்சனம் செய்துவரும் நிலையில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

ரவி மோகன் பதிவு

அந்த வகையில் நடிகர் ரவி மோகன் விஜய்க்கு ஆதரவாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், “இதயம் நொறுங்கியிருக்கிறது விஜய் அண்ணா. ஒரு சகோதரனாக, உங்களோடு நிற்கும் லட்சக்கணக்கான சகோதரர்களில் ஒருவனாக நான் நிற்கிறேன்.

ரவி மோகன்
ரவி மோகன்

உங்கள் படத்திற்கு தேதி தேவையில்லை. படம் வெளியாகும் தேதியை எப்போது அறிவிக்கிறார்களோ… அன்றுதான் பொங்கல் தொடங்குகிறது” என்று விஜய்க்கு ஆதரவாகப் பதிவிட்டிருந்தார்.

இதுவும் கடந்துபோகும்!

இதனைத்தொடர்ந்து நடிகர் சிம்பு விஜய் குறித்து பதிவிட்டிருக்கிறார். “டியர் விஜய் அண்ணா பின்னடைவுகள் உங்களை எப்போதும் தடுத்ததில்லை. இதை விட பெரிய புயலை நீங்கள் கடந்திருக்கிறீர்கள். இதுவும் கடந்துபோகும். ‘ஜன நாயகன்’ வெளியாகும் நாளில் தான் உண்மையான பொங்கல் தொடங்கும்” என்று பதிவிட்டிருக்கிறார்.

சிம்பு
சிம்பு

மிகப்பெரிய ‘Farewell’ படம்…

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டிருக்கும் பதிவில், ” எதுவாக இருந்தாலும் சரி… இந்திய சினிமாவில் இது மிகப்பெரிய ‘Farewell’ படமாக இருக்கும்” என்று விஜய்க்கு ஆதரவளிக்கும் வகையில் பகிர்ந்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.