விஜய் நடித்துள்ள பெரிதும் எதிர்பார்க்கப்படும் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ ஜனவரி 9, 2026, வெள்ளிக்கிழமை அன்று வெளியாகாது என்றும், தங்களின் புதிய வெளியீட்டுத் திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்ஷன்ஸ் நேற்றிரவு அறிவித்தது. தயாரிப்பு நிறுவனம் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கில் ஜனவரி 9 ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் தேதி குறிப்பிடாமல் வெளியீட்டை ஒத்திவைத்திருப்பதால் விநியோகிஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தனி […]