சென்னை: அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் இரண்டு பேர் இன்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவினர் இணைந்தனர். இது அதிமுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும் ஓபிஎஸ் ஆதரவாளருமான பழனி தொகுதி முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம் இன்று சென்னை அண்ணா அறிவாலயம் வந்து, திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அதுபோல, சிவகாசி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ பாலகங்காதரனும் முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 4 […]