ரயில் டிக்கெட்டுகளில் தள்ளுபடி பெறுவது எப்படி? இந்திய ரயில்வே முக்கிய அறிவிப்பு

Train Ticket Offer : ரயில் பயணிகளுக்கு ஒரு குட்நியூஸ். இந்திய ரயில்வேயின் RailOne செயலி மூலம் முன்பதிவு செய்யப்படும் குறிப்பிட்ட சில வகை டிக்கெட்டுகளுக்கு தள்ளுபடியை அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பயணிகள், டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதை எளிமையாக்கும் வகையில் பிரத்யேகமாக RailOne செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. டிக்கெட் முன்பதிவு மற்றும் Real-time train tracking முதல் உணவு ஆர்டர்கள் வரை பல ஆப்சன்கள் இந்த செயலியில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த செயலியை ஊக்குவிக்கும் வகையில், பல அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரயில்வே டிஜிட்டல் கட்டண முறைகளைப் பயன்படுத்தி RailOne செயலி மூலம் செய்யப்படும் அன்-ரிசர்வ்டு டிக்கெட் முன்பதிவுகளுக்கு 3% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source

ரயில் பயணிகள் பெரும்பான்மையானோர் ஏற்கனவே IRCTC Rail Connect மற்றும் UTSonMobile போன்ற டிஜிட்டல் டிக்கெட் செயலிகளை அறிந்திருப்பார்கள். அதனால், புதிதாக வந்திருக்கும் RailOne செயலி பற்றி தெரிந்திருக்க வாய்ப்புகள் மிக குறைவு. எனவே, RailOne செயலி என்றால் என்ன?, அதனை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

RailOne செயலி என்றால் என்ன?

RailOne என்பது இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ செயலியாகும். இந்த செயலி பல சேவைகளை ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து யூசர்களுக்கு ஏற்ற வகையில் கொடுக்கிறது. அதாவது, முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள், PNR நிலை, Real-time train tracking , உணவு விநியோகம் உள்ளிட்ட பல சேவைகளை இந்த செயலி மூலம் பெற முடியும். RailOne ஆண்ட்ராய்டு மற்றும் iOS தளங்களில் கிடைக்கிறது.

RailOne செயலி 3% தள்ளுபடி சலுகை

டிஜிட்டல் கட்டண முறைகளைப் பயன்படுத்தி பணம் செலுத்தும்போது RailOne செயலி மூலம் முன்பதிவு செய்யப்பட்ட, முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளுக்கு இந்திய ரயில்வே 3% தள்ளுபடியை வழங்குகிறது. இந்த சலுகை ஜனவரி 14 முதல் ஜூலை 14, 2026 வரை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை RailOne செயலி வழியாக நேரடியாக முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும்.

ரயில் டிக்கெட் தள்ளுபடியை பெறுவது எப்படி?

1. RailOne செயலியை பதிவிறக்கவும் – உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ஆப் ஸ்டோரிலிருந்து RailOne செயலியை பதிவிறக்கி இன்ஸ்டால் செய்யவும்.

2. புதிய கணக்கை உருவாக்கவும் – மொபைல் எண்ணை பதிவிட்டு, உங்கள் கணக்கை ஓபன் செய்யவும்

3. புரொபைல் பூர்த்தி செய்யவும் – உங்கள் பெயர் மற்றும் தொடர்பு விவரங்கள் போன்ற அத்தியாவசிய தகவல்களை பூர்த்தி செய்யவும்.

4. டிக்கெட் வகை – அன்-ரிசர்வ்டு டிக்கெட் முன்பதிவுக்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, பயணத் தேதியுடன் நீங்கள் புறப்படும் இடம் மற்றும் சேருமிடத்தை பூர்த்தி செய்யவும்.

5. டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தவும் – UPI, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் உள்ளிட்டவை மூலம் கட்டணம் செலுத்தவும். இப்படி பணம் செலுத்தினால் மட்டுமே தள்ளுபடி கிடைக்கும்.

6. தள்ளுபடி கிடைக்கும் – முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளுக்கு 3% தள்ளுபடி தானாகவே பயன்படுத்தப்படும், மேலும் குறைக்கப்பட்ட கட்டணம் நீங்கள் பணம் செலுத்துவதற்கு முன்பு பிரதிபலிக்கும்.

RailOne vs UTS: 

பல ஆண்டுகளாக, UTSonMobile (UTS) செயலி முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள் மற்றும் சீசன் பாஸ்களை முன்பதிவு செய்வதற்கான முதன்மை டிஜிட்டல் விருப்பமாக செயல்பட்டது. இதில் ஆப்சன்கள் குறைவாகவே இருக்கிறது. அதேநேரத்தில் இந்திய ரயில்வே இப்போது RailOne செயலிக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், இந்த செயலியை பயன்படுத்தும்போது ரயில் பயணிகள் சலுகைகளை பெறலாம்.

About the Author


Karthikeyan Sekar

Karthikeyan Sekar

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.