CSK பிளேயிங் 11 இப்படி இருந்தா நல்லா இருக்கும்.. 28 வயது இந்திய வீரருக்கு வாய்ப்பு – முழு விவரம்!

Chennai Super Kings Latest News: 2026 ஐபிஎல் தொடங்க இன்னும் ஏறதாள 3 மாதங்கள் உள்ளன. ஆனால் தற்போதில் இருந்தே அத்தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி ஐபிஎல்லின் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை அணியில் தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவித்தனர். அந்த வகையில் சென்னை அணி பல அதிர்ச்சிகரமான விடுவித்ததலை அறிவித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் இருந்து சஞ்சு சாம்சனை வர்த்தகம் செய்துவிட்டு ஜடேஜா மற்றும் சான் கரணை அவருக்கு விலையாக கொடுத்தது. 

Add Zee News as a Preferred Source

IPL 2026: மினி ஏலத்தில் ஸ்மாட் மூவ் 

இத்தனை ஆண்டுகளாக சிஎஸ்கே அணிக்கு பல வெற்றிகளை பெற்றுத்தந்த ஜடேஜாவை வெளியேற்றியது ரசிகரகள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் மினி ஏலத்தை நோக்கி நம்பிக்கையுடன் இருந்தனர். இந்த சூழலில், மினி ஏலத்தில் சென்னை அணி இதுவரை இந்திய அணிக்காக அறிமுகமாகாத இரண்டு இளம் வீரர்களை ரூ. 14 கோடிக்கு எடுத்து மேலும் அதிர்ச்சி அடைந்தது. வெளிநாட்டு வீரர்களில் அகீல் ஹொசைனை எடுத்தனர். அதேபோல் சர்பராஸ் கானை கடைசி நேரத்தில் ரூ. 75 லட்சத்திற்கு வாங்கினர். 

Chennai Super Kings 2026 IPL Plan: சிஎஸ்கே பக்கா பிளான் 

இந்த தேர்வு ரசிகர்கள் பலரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிஎஸ்கே அனுபவம் வாய்ந்த சர்வதேச வீரர்களை எடுக்கும் என நினைத்த நிலையில், இளம் வீரர்களை எடுத்தது ஆச்சரியத்தை கொடுத்தது. ஆனால் சிஎஸ்கே அணியின் கணக்கு பொய்க்கவில்லை. சிஎஸ்கே அணி எடுத்த வீரர்கள் அனைவருமே தற்போது உள்ளூர் மற்றும் லீக் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஜடேஜாவுக்கு மாற்றாக பிரசாந்த் வீரர் அல்லது அகீல் ஹொசன் இருப்பார்கள் என தெரிகிறது. 

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் வரிசை எப்படி இருக்கும். எந்த மாதிரியான பந்து வீச்சாளர்கள் அணியில் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம். 

Dewald Brevis: ஃபினிஷர் ரோலில் டெவால்ட் ப்ரீவிஸ்

வரும் ஐபிஎல்லுடன் எம். எஸ். தோனி ஓய்வு பெற இருக்கிறார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்காலத்தை மனதில் வைத்து செயல்பட்டு வருகிறது. அதன் அடிப்படையிலேயே சென்னை அணி ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட அணியை உருவாக்கி வருகிறது. இந்த சூழலில், டெவால்ட் ப்ரீவிஸை ஃபினிஷர் ரோலில் ஆட வைக்கப்போவதாக ஒரு தகவலும் வெளியாகி வருகிறது. 

Sarfaraz Khan: உள்ளே வரும் சர்பராஸ் கான் 

அதேபோல் சர்ப்ராஸ் கானையும் அணிக்குள் கொண்டு வர திட்டம் தீட்டி வருவதாக கூறப்படுகிறது. சர்பராஸ் கான் சமீபத்தில் நடந்து முடிந்த சையத் முஷ்டாக் அலி டிராபியிலும் நடந்து வரும் விஜய் ஹசாரே டிராபி தொடரில் அட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனை பார்த்த சிஎஸ்கே அணிக்கு பலம் சேர்க்கும் விதமாக அவரை அணிக்கு கொண்டு வந்தால் சிறப்பக இருக்கும் என கருதுகிறது. 

CSK Best Playing XI For IPL 2026: சிஎஸ்கே அணியின் உத்தேச பிளேயிங் 11

சஞ்சு சாம்சன், ஆயுஷ் மாத்ரே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), சர்பராஸ் கான், ஷிவம் துபே, டெவால்ட் ப்ரீவிஸ், எம்.எஸ்.தோனி, அகில் ஹொசைன், நூர் அகமது, நேதன் எல்லிஸ், மாட் ஹென்றி, இம்பேக்ட் வீரராக கலீல் அகமத்தை கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும் என கருதப்படுகிறது. 

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.