சென்னை: சமவேலைக்கு சமஊதியம் கேட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு, சம்பளம் கட், விடுமுறை கிடையாது என தொடக்கக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் முதல்வராக மறைந்த திமுக தலைவர் கருணாநிதி இருந்தபோது, கடந்த 2009ம் ஆண்டு மே 31-ம் தேதி அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஓர் ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. […]