IND vs NZ 1st ODI: இந்திய அணியின் பிளேயிங் 11 இதுதான்.. பண்டுக்கு இடமில்லை.. மற்றொரு வீரருக்கு வாய்ப்பு?

IND vs NZ Latest News: இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாடியது, அந்த அணிக்கு எதிராக 3 வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடிய நிலையில், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்கா அணியும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணியும் வென்றது. இத்தொடரை அடுத்து இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் மோத இருக்கிறது. 

Add Zee News as a Preferred Source

IND vs NZ ODI Series: நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் 

இந்தியாவுக்கு வருகை தரும் நியூசிலாந்து அணி  3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியுடன் விளையாட இருக்கிறது. முதலில் ஒருநாள் தொடர் நடைபெற இருக்கிறது. வரும் 11ஆம் தேதி இத்தொடர் தொடங்குகிறது. இத்தொடருக்கான இந்திய அணி ஜனவரி  3ஆம் தேதி பிசிசிஐ தேர்வு குழுவால் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் மூத்த வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா விளையாட இருக்கின்றனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

Shreyas Iyer Return To Indian Team: இந்திய அணிக்கு திரும்பிய ஸ்ரேயாஸ் ஐயர் 

அக்டோபரில் நடைபெற்ற ஆஸ்திரேலியா தொடரின்போது காயம் ஏற்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் ஓய்வுக்கு பின்னர் இத்தொடரின் மூலம் மீண்டும் இந்திய அணி திரும்பி இருக்கிறார். கேப்டன் சுப்மன் கில்லுக்கு உதவியாக துணை கேப்டனாக செயல்பட இருக்கிறார். ஸ்ரேயாஸ் ஐயர் அணிக்கு திரும்பியதன் காரணமாக அணியில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இடம் கிடைக்கவில்லை. ரிஷப் பண்ட் பேக்கப் வீரராக எடுக்கப்பட்டுள்ளார். யஸ்ஷவி ஜெய்ஸ்வால், நிதிஷ் குமார் ரெட்டிக்கும் 15 பேட் கொண்ட இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. 

Shreyas Iyer Fitness Update: உடற்தகுதியை நிரூபித்த ஸ்ரேயாஸ் ஐயர் 

ஸ்ரேயாஸ் ஐயர் இந்த அணியில் இடம் பெற்றிருந்தாலும், அவர் தனது உடற்தகுதியை நிரூபிக்க வேண்டிய நிலை இருந்தது. பேட்டிங் அவர் ஆடினாலும் முழு நேரம் ஃபீல்டிங் செய்வாரா என்ற கேள்வி இருந்தது. ஆனால் தான் ஃபிட்டாக இருக்கிறேன் என நேற்று முன்தினம் (ஜனவரி 06) நடந்த விஜய் ஹசாரே போட்டியில் விளையாடியதன் மூலம் நிரூபித்தார். எனவே அவர் நிச்சயம் பிளேயிங் 11ல் இடம் பிடிப்பார் என தெரிகிறது. 

Nitish Kumar Reddyநிதிஷ் குமார் ரெட்டிக்கு வாய்ப்பு கிடைக்கலாம் 

அதேசமயம் ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோரில் ஒருவருக்காவது பிளேயிங் 11ல் இடம் கிடைக்குமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இவர்களில் நிதிஷ் குமார் ரெட்டிக்கு பிளேயிங் 11ல் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற இவருக்கு முதல் இரண்டு போட்டிகளில் வாய்ப்பு கிடைக்க வாய்ப்பே இல்லை என தெரிகிறது.  

முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் 11

ரோகித் சர்மா, சுப்மன் கில் (கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ் மற்றும் முகமது சிராஜ். 

 

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.