T20 Worldcup: திலக் வர்மா காயம்! டி20 அணியில் இடம்பெறும் சுப்மன் கில்?

இந்திய டி20 அணியின் முக்கிய வீரரான திலக் வர்மாவிற்கு, திடீர் என ஏற்பட்ட காயத்தால் அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக நியூசிலாந்து தொடரிலிருந்து அவர் விலகியுள்ளார். மேலும் டி20 உலக கோப்பை அணியில் இருந்தும், அவர் விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திலக் வர்மாவிற்கு பதிலகா சுப்மன் கில் அணியில் இடம் பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ராஜ்கோட்டில் விஜய் ஹசாரே டிராபி போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி கொண்டிருந்த திலக் வர்மா, கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது.

Add Zee News as a Preferred Source

Tilak Varma has just undergone a ‘Testicular Torsion’ surgery. Recovery may be 2-4 weeks – and the T20 World Cup starts in 4 weeks.

Testicular torsion is a medical emergency where the spermatic cord twists, cutting off blood supply to the testicle, causing sudden, severe pain,… pic.twitter.com/dzqeR0GmXI

— Praveen Kumar (@RigidDemocracy) January 8, 2026

உடனடி சிகிச்சை

மருத்துவமனையில் சிகிச்சையில் டெஸ்டிகுலர் டார்ஷன் (Testicular Torsion) என்ற தீவிர நிலை இருப்பது கண்டறியப்பட்டு, அவருக்கு நேற்று ஜனவரி 7 அன்று உடனடி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தாலும், குணமடைய 3-4 வாரங்கள் ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஜனவரி 21 முதல் 31 வரை இந்தியாவில் நடைபெற உள்ள நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டி டி20 தொடரில் திலக் வர்மா விளையாட மாட்டார் என்பது உறுதியாகி உள்ளது. மேலும் பிப்ரவரி 7 முதல் தொடங்கும் டி20 உலகக் கோப்பையிலும் அவர் விளையாடுவது சந்தேகத்திற்கு உள்ளாகி உள்ளது.

 Tilak Varma’s T20 World Cup participation uncertain

He underwent surgery for Testicular Torsion in Rajkot on Wednesday (January 7)

Officials say the surgery requires 3 to 4 weeks for full recovery pic.twitter.com/G9hitupnbl

— Cricbuzz (@cricbuzz) January 8, 2026

சுப்மன் கில் இடம் பெறுவாரா?

இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தேர்வுக் குழு சுப்மன் கில்லை அணியில் சேர்க்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கும் சுப்மன் கில்லை அணியில் எடுத்து, அவர் சரியாக விளையாடவில்லை என்றால் அவரை பெஞ்சில் உட்கார வைக்க பிசிசிஐ விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், திலக் வர்மா முதல் சில போட்டிகளில் மட்டுமே விளையாட முடியாமல் போகலாம் என்றும், அதற்குள் குணமடைந்து திரும்பிவிடுவார் என்றும் கூறப்படுகிறது. இதனால் மாற்று வீரர் தேவைப்பட மாட்டார் என்றும் கூறப்படுகிறது.

கில் ஏன் இல்லை?

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் அசத்திய கில், ஆகஸ்ட் 2025ல் ஆசிய கோப்பைக்கு துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், டி20 வடிவத்தில் அவரது பேட்டிங் அவ்வளவு சிறப்பாக இல்லை. 15 இன்னிங்ஸ்களில் 24.25 சராசரியுடனும், 137.26 ஸ்டிரைக் ரேட்டுடனும் வெறும் 291 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதில் ஒரு அரைசதம் கூட அடிக்க முடியவில்லை. இதனால் தேர்வு குழு அதிர்ச்சியளிக்கும் வகையில் கில்லை டி20 உலகக் கோப்பை அணியிலிருந்து நீக்கியது. நியூசிலாந்து தொடரில் ரியான் பராக் திலக் வர்மாவிற்கு பதிலாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், அவரும் சில காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரியான் பராக் விஜய் ஹசாரே டிராபியில் விளையாடவில்லை, கடைசியாக டிசம்பர் 6ல் சையது முஷ்தாக் அலி டிராபியில் விளையாடினார்.

திலக் வர்மாவிற்கு மாற்று வீரர்கள் யார் யார்?

யஷஸ்வி ஜெய்ஸ்வால்
ஷ்ரேயஸ் ஐயர்
ருதுராஜ் கெய்க்வாட்
தேவ்தத் படிக்கல்

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.