சென்னை: சென்னையில் பொங்கலுக்கு முன்னதாக வரும் 10 மற்றும் 11ம் தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெறும் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 4,079 வாக்குச்சாவடிகளில் முகாம் நடக்கிறது இதுகுறித்து சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, சென்னை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் 19ம்தேதி வெளியிடப்பட்டது. […]