டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் பிளேயிங் 11 இதுதான்.. முக்கிய வீரருக்கு இடமில்லை – முழு விவரம்!

Ajinkya Rahane India Predicted XI For T20 World Cup 2026: இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கும் இத்தொடரில் மொத்தமாக 20 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 4 குரூப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ குரூப்பில் நபிபியா, நெதர்லாந்து, அமெரிக்கா, பாகிஸ்தான், இந்தியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. அதேபோல் குரூப் பி-யில் ஓமன், அயர்லாந்து, ஜிம்பாப்வே, இலங்கை, ஆஸ்திரேலியா அணிகளும் குரூப் சி-யில் இத்தாலி, நேபால், வெஸ்ட் இண்டீஸ், இங்கை மற்றும் வங்கதேச அணிகளும் குரூப் டி-யில் ஆப்கானிஸ்தான், கனடா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, யுஏஇ ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. 

Add Zee News as a Preferred Source

Team India T20 World Cup Plan: கோப்பையை தக்கவைக்கும் முனைப்பில் இந்திய அணி 

இந்த சூழலில், அனைத்து அணிகளும் அடுத்த மாதம் இந்தியா வர இருக்கிறது. மேலும், அத்தொடருக்காக கடுமையான பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய அணியில் பொறுத்தவரையில் கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையை வென்றதை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் களமிறங்க உள்ளது. ஆனால் மற்ற அணிகள் இத்தொடரை அவ்வளவு எளிதில் விடுவதாகவும் தெரியவில்லை. பெரிய அணிகளான ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் கடும் போட்டியை கொடுக்கும். 

இதுவரை இத்தொடருக்கான அணியை இந்தியா, ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே, ஓமன், நபிபியா, வங்கதேசம், நேபால், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் அறிவித்துள்ளன. மீதமுள்ள அணிகள் வரும் நாட்களில் தங்களின் அணிகளை அறிவிக்கு. 

Suryakumar Yadav: சூர்யகுமார் யாதவ் கேப்டன்சியில் இந்திய அணி 

இந்திய அணி கடந்த டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கிய நிலையில், இம்முறை சூர்யகுமார் யாதவ் கேப்டன்சியில் களமிறங்குகிறது. டி20 உலகக் கோப்பை நெருங்கி வருவதால் ரசிகள் இடையே அத்தொடருக்கான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்திய அணியில் சுப்ம்ன கில் மோசமான ஃபார்ம் காரணமாக இடம் பெறவில்லை. இந்த சூழலில், ரசிகர்கள் பலரும் இந்திய அணியின் பிளேயிங் 11 என்னவாக இருக்கும் என்பது குறித்து கருத்து பகிர்ந்து வருகின்றனர். 

Ajinkya Rahane Predicted India Playing XI For T20 Word Cup: உலகக் கோப்பக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த ரஹானே

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜின்க்யா ரஹானே டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி எப்படி இருக்கும் என்பது குறித்து அவர் பேசி இருக்கிறார். இது தொடர்பாக பேசிய அவர், இந்த டி20 உலகக் கோப்பையின் அனைத்து போட்டிகளிலும் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி விளையாட வேண்டும். அவர்தான் திருப்பு முனையாக இருப்பார். மற்றொரு வீரரான குல்தீப் யாதவ் எல்லா போட்டிகளிலும் விளையாடுவது என்பது கடினமே. ஏனென்றால் ரிங்கு சிங் பிளேயிங் 11ல் வரும்போது குல்தீப்புக்கு இடம் கிடைக்காது என்றார். 

T20 World Cup 2026 India Predicted Playing 11: அஜின்க்யா ரஹானே தேர்வு செய்த டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி

அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ஷிவம் துபே, ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரீத் பும்ரா. 

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.