e-Aadhaar: இனி அசல் கார்டு தேவையில்லை! மொபைலில் பதிவிறக்கம் செய்வது எப்படி?

e-Aadhaar: இந்தியாவில் எல்லா சமூக திட்டங்களுக்கும் ஆதார் கார்டே முக்கிய ஆவணம். இந்த கார்டில் இருக்கும் தகவல்களும் சரியாக இருக்க வேண்டும். அப்படி இருந்துவிட்டால், நீங்கள் அரசின் திட்டங்களை எளிதாக பெறமுடியும். அதேநேரத்தில் எல்லா இடங்களுக்கும் அசல் ஆதார் கார்டுகளை எடுத்துச் செல்ல முடியாது. அப்படியான நேரத்தில் டிஜிட்டல் வடிவில் இருக்கும் இ-ஆதார் (e-Aadhaar) கார்டுகளை அதிகாரப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ளலாம். பிடிஎப் வடிவில் இருக்கும் இ-ஆதார் கார்டுக்கு பாஸ்வேர்டு இருக்கும். இதனால், இதில் இருக்கும் தகவல்களுக்கு பாதுகாப்பு உண்டு. 

Add Zee News as a Preferred Source

இ-ஆதார் கார்டுக்கு பாஸ்வேர்டு என்ன? என்ற கேள்வி இருக்கலாம். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பாஸ்வேர்டு இருக்கும். உங்களின் இ-ஆதார் கார்டு பாஸ்வேர்டை எப்படி கண்டுபிடிக்கலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 

– உங்கள் பெயரின் முதல் 4 எழுத்துக்கள் (ஆங்கிலத்தில் – Capital Letters).
– நீங்கள் பிறந்த ஆண்டு. அதாவது, உங்கள் பெயர் DEEPAK GUPTA, பிறந்த ஆண்டு 1994 என்றால், உங்கள் கடவுச்சொல் DEEP1994 என்பதாகும்.

இ-ஆதாரை பதிவிறக்கம் செய்வது எப்படி?

UIDAI இணையதளம், mAadhaar செயலி என இரண்டு வழிகளில் இ-ஆதாரைப் பெற்றுக்கொள்ளலாம்.

UIDAI வெப்சைட் மூலம் பெறுவது எப்படி?

– முதலில் UIDAI-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் (செல்லவும்.
– அதில் ‘Download Aadhaar’ என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
– உங்கள் 12 இலக்க ஆதார் எண் அல்லது பதிவு எண் (Enrollment ID) அல்லது விர்ச்சுவல் ஐடி (VID)-ஐ உள்ளிடவும்.
– திரையில் தோன்றும் ‘Captcha’ குறியீட்டை உள்ளிட்டு, ‘Send OTP’ என்பதைக் கிளிக் செய்யவும்.
– உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபி (OTP)-ஐ உள்ளிட்டு, ‘Verify & Download’ கொடுத்தால் உங்கள் இ-ஆதார் பிடிஎஃப் (PDF) பதிவிறக்கமாகும்.

mAadhaar செயலி மூலம் பதிவிறக்கம்

– கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து ‘mAadhaar’ செயலியைப் பதிவிறக்கம் செய்யவும்.
– உங்கள் மொபைல் எண் மற்றும் ஆதார் விபரங்களை உள்ளிட்டு லாக்-இன் செய்யவும்.
– அதில் உள்ள ‘Download Aadhaar’ என்பதைத் தேர்வு செய்யவும்.
– உங்கள் மொபைலுக்கு வரும் ஓடிபி மூலம் சரிபார்ப்பை முடித்து, இ-ஆதார் நகலை உங்கள் போனில் சேமித்துக் கொள்ளலாம்.

இ-ஆதாரின் நன்மைகள்:

– இது டிஜிட்டல் முறையில் கையொப்பமிடப்பட்டிருப்பதால் போலியாக உருவாக்க முடியாது.
– பர்ஸ் அல்லது பையில் கார்டைத் தேட வேண்டிய அவசியமில்லை, உங்கள் ஸ்மார்ட்போனிலேயே இருக்கும்.
– இதில் உள்ள க்யூஆர் கோடு மூலம் Instant Verification செய்ய முடியும்.

ஆதார் கார்டில் மொபைல் எண்ணை இணைப்பது எப்படி? 

ஆதார் கார்டில் உங்கள் மொபைல் எண் இணைக்கப்பட்டிருப்பது மிகவும் அவசியம். அப்போதுதான் உங்களால் இ-ஆதாரை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யவும், முகவரி மாற்றம் போன்ற சேவைகளை வீட்டிலிருந்தே பெறவும் முடியும். ஆதார் கார்டில் மொபைல் எண்ணை ஆன்லைனில் இணைக்க முடியாது. ஆனால், அதற்கான முன்பதிவை ஆன்லைனில் செய்துவிட்டு, வரிசையில் நிற்காமல் வேலையை முடிக்கலாம்.

பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

– UIDAI-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் Book an Appointment பக்கத்திற்குச் செல்லவும்.
– உங்கள் ஊர் அல்லது அருகிலுள்ள Aadhaar Seva Kendra-வைத் தேர்ந்தெடுக்கவும்.
– Aadhaar Update’ என்பதைத் தேர்வு செய்து, உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு வரும் OTP-யைச் சமர்ப்பிக்கவும்.
– உங்களுக்கு வசதியான தேதி மற்றும் நேரத்தைத் (Slot) தேர்வு செய்து முன்பதிவு செய்யவும்.
– முன்பதிவு செய்த நேரத்தில் சம்பந்தப்பட்ட ஆதார் மையத்திற்குச் செல்லவும்.
– அங்குள்ள அதிகாரியிடம் உங்கள் ஆதார் எண்ணைக் கூறி, மொபைல் எண்ணைப் புதுப்பிக்கச் சொல்ல வேண்டும்.
– உங்கள் பயோமெட்ரிக் கண் கருவிழி அல்லது கைரேகை சரிபார்ப்பு செய்யப்படும்.
– இதற்குப் படிவங்கள் எதுவும் தேவையில்லை, அங்கேயே டிஜிட்டல் முறையில் சரிபார்க்கப்படும்.
– மொபைல் எண்ணைப் புதுப்பிக்க ரூ.50 மட்டும் கட்டணமாக வசூலிக்கப்படும்.
– இது புதுப்பிக்கப்படுவதற்கு 24 மணிநேரம் முதல் அதிகபட்சம் 30 நாட்கள் வரை ஆகலாம். உங்கள் மொபைலுக்கு இது குறித்த SMS வரும்.

About the Author


Karthikeyan Sekar

Karthikeyan Sekar

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.