சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து இன்று இலங்கை அருகே கரையை கடக்கவுள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள் சென்னை உள்ளிட்ட தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை, 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது சென்னை, செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, […]