Bigg Boss Tamil 9: கடைசி வாரத்தில் வெளியேறிய வைல்டு கார்டு போட்டியாளர்!

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 ன் கடைசி வார எவிக்‌ஷனில் அவுட் ஆகி வெளியேறியுள்ளார் வைல்டு கார்டு போட்டியாளர் ஒருவர்.

கடந்தாண்டு அக்டோபர் முதல் வாரம் தொடங்கியது நிகழ்ச்சி.

வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை, உள்ளிட்ட இருபது பேர் கலந்து கொண்டனர்.

இவர்களில் நந்தினி பிக்பாஸ் வீடு செட் ஆகாமல் முதல் வாரத்திலேயே வெளியேறி விட்டார்.

பிரவீன் காந்தி, அப்சரா, திவாகர், துஷார், பிரவீன் உள்ளிட்டோர் அடுத்தடுத்த வாரங்களில் எவிக்‌ஷன் மூலம் வெளியேறினர்.

சாண்ட்ரா | BB Tamil 9 Day 93

கடந்த வாரம் அதிரடியாக கமருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.

தொடர்ந்து இரு தினங்களுக்கு முன் பணப்பெட்டி டாஸ்க்கில் பெட்டியை எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார் வினோத்.

இந்நிலையில் அடுத்த வாரத்துடன் நிகழ்ச்சி முடிவடைய இருப்பதால் இந்த வாரம் எவிக்‌ஷன் இருக்காது என்ற பேச்சு முதலில் அடிபட்டது.

தவிர போட்டியில் தற்போது ஐந்து பேர் மட்டுமே இருப்பதால் இவர்கள் டாப் ஐந்து பேராக இறுதிச் சுற்றுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

கமருதீன்

ஆனால் இந்த வாரமும் எவிக்‌ஷனை நிகழ்த்தியிருக்கிறார் பிக்பாஸ்.

வழக்கமான வார இறுதி எவிக்‌ஷனுக்கான ஷூட்டிங் இன்று பிக்பாஸ் செட்டில் நடந்தது.

எவிக்ட் ஆகி வெளியில் சென்ற போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு வந்திருந்த நிலையில் அவர்களிடமும் பணப்பெட்டி எடுத்துச் சென்ற கானா வினோத்திடமும் பேசிய விஜய் சேதுபதி பின் வழக்கமான விசாரிப்புகளுக்குச் சென்றார்.

பிறகு எவிக்‌ஷனுக்கான நேரம் எனச் சொல்லி இருந்த ஐந்து பேரில் சாண்ட்ராவை வெளியில் அனுப்பி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் கணவர் பிரஜினுடன் தம்பதி சகிதமாக வைல்டு கார்டு மூலம் நிகழ்ச்சிக்குள் வந்தது நினைவிருக்கலாம்.

பிரஜின், சாண்ட்ரா

முந்தைய சில சீசன்களில் டாப் ஐந்து பேர் கடைசி நாள் வரை வந்த  நிலையில் இந்த சீசனில் மட்டும் எப்படி கடைசி வாரத்தில் ஒருவர் அவுட் என தெரியவில்லை.

கமருதீன் பார்வதிக்கு ரெட் கார்டு தந்த விவகாரம் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் பெரிய அதிர்வை உண்டாக்கியதென்னவோ நிஜம்தான். ஒருவேளை அதைச் சமன் செய்ய பிக்பாஸ் சாண்ட்ராவை அனுப்பி விட்டாரோ என்னவோ?

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.