India’s Predicted Playing XI vs New Zealand: டி20 உலக கோப்பை அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று ஜனவரி 11 தொடங்குகிறது. முதல் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோட்டாம்பி மைதானத்தில் நடைபெறவுள்ளது. தென்னாபிரிக்கா தொடருக்கு பிறகு ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி இந்த ஒருநாள் போட்டிகளுக்கு திரும்புகின்றனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2027ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலக கோப்பைக்கு ஒரு பயிற்சி ஆட்டமாக இந்த தொடர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக நியூசிலாந்து அணி இந்தியா வந்த போது 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, இந்தியாவை வைட்வாஸ் செய்து இருந்தது.
Add Zee News as a Preferred Source
Virat Kohli Rohit Sharma ready for the #INDvNZ ODIs #TeamIndia | @IDFCFIRSTBank | @imVkohli | @ImRo45 pic.twitter.com/8xWIo7CtBm
— BCCI (@BCCI) January 10, 2026
ரோஹித் – கில் கூட்டணி
தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடருக்கு பிறகு காயத்தால் ஓய்விலிருந்த கேப்டன் சுப்மன் கில், தற்போது அணிக்கு திரும்பி உள்ளார். இதனால் ரோஹித் ஷர்மாவுடன் சுப்மன் கில் தொடக்க வீரராக களமிறங்குவது உறுதியாகி உள்ளது. சுப்மன் கில் சமீபத்திய உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும், இந்த தொடர் அவருக்கு முக்கியமானதாக அமையும். மூன்றாவது இடத்தில் விராட் கோலி களமிறங்குவார். அவருக்கு பின் நான்காவது இடத்தில் ஷ்ரேயஸ் ஐயர் அணிக்கு திரும்புவது மிடில் ஆர்டருக்கு கூடுதல் பலம் சேர்க்கும். காயங்கள் மற்றும் ஓய்வுக்கு பிறகு திரும்பும் ஷ்ரேயஸ் ஐயர், தனது இடத்தை தக்கவைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கே.எல். ராகுல் விளையாட உள்ளார்.
மிடில் ஆர்டர் பலம்
டி20 உலக கோப்பை வரவுள்ள நிலையில், ஹர்திக் பாண்டியாவிற்கு இந்த தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு பதிலாக நிதிஸ் குமார் ரெட்டி விளையாட அதிக வாய்ப்புள்ளது. மேலும் ஸ்பின் ஆல்ரவுண்டர் இடத்திற்கு கடும் போட்டி நிலவுகிறது. சமீபத்திய தகவல்களின்படி, வாஷிங்டன் சுந்தர் முதல் போட்டியில் இடம்பெற வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக, அனுபவ வீரர் ரவீந்திர ஜடேஜா அணியில் சேர்க்கப்படலாம். ஜடேஜாவின் பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் திறன் அவருக்கு கூடுதல் வாய்ப்பை அளிக்கிறது.
பந்துவீச்சு கூட்டணியில் ஜஸ்பிரித் பும்ரா ஓய்வில் உள்ளதால், இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா இடம் பெறுவார். அவருக்கு கைகொடுக்க முகமது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம் பெறுவார்கள். குல்தீப் யாதவ் முக்கிய ஸ்பின்னராக இருப்பார். வதோதரா மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு இங்கு சர்வதேச போட்டி நடைபெறுவதால் ரசிகர்கள் ஆர்வமுடன் மைதானத்திற்கு வருவார்கள். நியூசிலாந்து அணி இந்தியாவில் எப்போதும் சவாலான அணியாகவே இருந்துள்ளது. இதனால் இன்றைய போட்டியின் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்தியாவின் உத்தேச பிளெயிங் லெவன்
ரோஹித் ஷர்மா, சுப்மன் கில் (கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா
நியூசிலாந்து ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி
சுப்மன் கில் (கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல். ராகுல், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், ரிஷப் பந்த், ரிஷப் குமார் ரெட்டி. ஜெய்ஸ்வால்.
About the Author
RK Spark