Grok AI சர்ச்சை: 'இந்திய சட்டத்தின் படி நடப்போம்' – தவறை ஒப்புக்கொண்ட எலான் மஸ்கின் எக்ஸ் நிறுவனம்

எலான் மஸ்க்கின் எக்ஸ் தளம், தனது Grok AI மூலம் ஆபாசப் படங்கள் உருவாக்கப்பட்ட விவகாரத்தில் தனது தவறை ஒப்புக்கொண்டு 600 கணக்குளை ஒப்புக்கொண்டிருக்கிறது.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எக்ஸ் தளத்தின் Grok AI மூலம் ஆபாச உள்ளடக்கங்கள் உருவாக்கப்படுவதற்கு எதிராக நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

 Grok  AI
Grok AI

இந்நிலையில் எக்ஸ் நிறுவனம் தனது தளத்தில் ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடுகளை ஒப்புக்கொண்டிருக்கிறது.

இனி வரும் காலங்களில் இந்தியச் சட்டங்களுக்கு உட்பட்டு நடப்போம் என்றும் உறுதி அளித்துள்ளது.

தவிர ஆபாசமான ப்ராம்ப்ட்களை (Prompts) பயன்படுத்தித் தவறான உள்ளடக்கங்களை உருவாக்கிய சுமார் 600-க்கும் மேற்பட்ட கணக்குகளை நிரந்தரமாக நீக்கி இருக்கிறது.

விதிகளை மீறி உருவாக்கப்பட்ட 3,500-க்கும் அதிகமான ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்களை எக்ஸ் தளத்திலிருந்து அகற்றியிருக்கிறது.

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

இனி வரும் காலங்களில் Grok AI மூலம் ஆபாசமான அல்லது பாலியல் ரீதியான படங்களை உருவாக்க முடியாது என்பதை உறுதி செய்யும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் எக்ஸ் நிறுவனம் மத்திய அரசிடம் தெரிவித்திருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.