Aadhaar : ஆதார் கார்டு தொடர்பான சேவைகள் எல்லாம் ஆன்லைன் மயமாக்கப்பட்டுவிட்டது. இருப்பினும் சில சேவைகளை மட்டும் ஆன்லைனில் மாற்ற முடியாது. நேரடியாக ஆதார் சேவை மையத்துக்கு செல்ல வேண்டும். அதில் ஒன்று, மொபைல் எண்ணை மாற்றுவதும். ஆம், யாரும் தங்களின் மொபைல் எண்ணை மாற்ற வேண்டும் என்றால், ஆன்லைனில் மாற்ற முடியாது. நேரடியாக ஆதார் சேவை மையத்துக்கு செல்ல வேண்டும். அதற்கு முன்பாக உங்கள் ஆதாருடன் எந்த மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
Add Zee News as a Preferred Source
அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் ஆதாருடன் எந்த மொபைல் நம்பர் இணைக்கப்பட்டுள்ளது என்பதை அறிய சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
மொபைல் எண் மற்றும் இமெயில் வழிமுறைகள்:
* முதலில் myaadhaar.uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைத் திறக்கவும்.
* அந்தப் பக்கத்தில் கீழே ஸ்க்ரோல் செய்து, ‘Verify Email/Mobile’ என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
* நீங்கள் உங்கள் மொபைல் எண்ணைச் சரிபார்க்க விரும்பினால், கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் உங்கள் ஆதார் எண் மற்றும் நீங்கள் சரிபார்க்க விரும்பும் மொபைல் எண்ணை உள்ளிடவும்.
* அதன் பிறகு, திரையில் தோன்றும் கேப்ட்சா (Captcha) குறியீட்டை உள்ளிட்டு, ‘Send OTP’ என்பதை கிளிக் செய்யவும்.
* உங்கள் மொபைல் எண் சரியாக இணைக்கப்பட்டிருந்தால், “நீங்கள் உள்ளிட்ட மொபைல் எண் ஏற்கனவே எங்கள் பதிவுகளில் சரிபார்க்கப்பட்டது” என்ற செய்தி திரையில் தோன்றும்.
இமெயிலை சரிபார்க்க:
* மின்னஞ்சலைச் சரிபார்க்க விரும்பினால், ‘Verify Email Address’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
* உங்கள் ஆதார் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு, கேப்ட்சா குறியீட்டுடன் சமர்ப்பிக்கவும்.
myAadhaar போர்ட்டலில் மொபைல் எண் சரிபார்ப்பு மட்டுமின்றி, உங்கள் முகவரியை மாற்றுதல், ஆதார் அட்டையைப் பதிவிறக்கம் செய்தல் மற்றும் உங்கள் ஆதார் பயோமெட்ரிக் தகவல்களை லாக் அல்லது அன்லாக் செய்தல் போன்ற பல சேவைகளை வீட்டிலிருந்தபடியே பெற முடியும்.
அருகில் உள்ள ஆதார் மையத்தை கண்டுபிடிப்பது எப்படி?
ஆதார் பயோமெட்ரிக், மொபைல் எண் மாற்றுவது உள்ளிட்ட சேவைகளுக்கு எல்லோரும் ஆதார் மையத்துக்கே செல்ல வேண்டும். அதனால், உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள ஆதார் மையத்தை ஆன்லைன் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அதனை எப்படி தெரிந்து கொள்வது என்பதையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
* முதலில் myaadhaar.uidai.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
* அங்கு ‘Locate an Enrolment Centre’ என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்.
* அடுத்த பக்கத்தில் உங்கள் மாநிலம் அல்லது பின் கோடு மூலமாகத் தேடும் வசதி இருக்கும்.
* உங்கள் பகுதியின் பின் கோடை உள்ளிட்டால், அந்தப் பகுதியில் உள்ள வங்கிகள், தபால் நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் செயல்படும் ஆதார் மையங்களின் பட்டியல் முகவரியுடன் தோன்றும்.
* இஸ்ரோவின் (ISRO) ‘புவன் ஆதார் போர்ட்டல்’ (bhuvan.nrsc.gov.in) மூலமாகவும் மேப் (Map) உதவியுடன் அருகில் உள்ள மையங்களை எளிதாகக் கண்டறியலாம். மேலும், ஆதார் மையத்தில் உங்களுக்கான அப்பாயிண்மென்ட்டையும் ஆன்லைனிலேயே புக்செய்து கொள்ள முடியும்.
About the Author

Karthikeyan Sekar
Karthikeyan Sekar
…Read More