இந்திய அணியில் இருந்து விலகும் மற்றொரு வீரர்? காயத்தால் அவதி – முழு விவரம்!

Indian Player Washington Sundar Injured: இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி20 தொடர் அடங்கிய நியூசிலாந்து அணியின் இந்த சுற்றுப்பயணத்தில் நேற்று (ஜனவரி 11) மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டிக்கு முன்னரே பயிற்சியின்போது, தசைப்பிடிப்பு காரணமாக ரிஷப் பண்ட் தொடரில் இருந்து விலகினார். அவருக்கு மாற்று வீரராக துருவ் ஜுரேல் அணிக்குள் கொண்டுவரப்பட்டார். 

Add Zee News as a Preferred Source

இந்த நிலையில், மற்றொரு இந்திய வீரருக்கும் காயம் ஏற்பட்டு அவதிபட்டு வருகிறார். அதாவது ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரும் தசை பிடிப்பு காரணமாக அவதிபட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால் அவர் மீதமுள்ள இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது. 

Washington Sundar injured: வாஷிங்டன் சுந்தருக்கு காயம் 

நேற்று (ஜனவரி 11)  முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மற்றும் நியூசிலாந்து அணியும் மோதின. இப்போட்டியில் முதலில் நியூசிலாந்து அணியே பேட்டிங் செய்தது. அப்போது அந்த அணிக்கு எதிராக வாஷிங்டன் சுந்தர் 5 ஓவர்கள் மட்டுமே வீசினார். சுந்தருக்கு இடுப்பில் ஏற்பட்ட வலி காரணமாக அவர் பாதியிலேயே மைதானத்தை விட்டு வெளியேறினார். அவருக்கு பதிலாக துருவ் ஜுரேல் களத்திற்கு ஃபீல்டிங் செய்ய வந்தார். இதன் காரணமாக வாஷிங்டன் சுந்தர் மீண்டும் களத்திற்கு வர மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. 

IND vs NZ ODI: காயமடைந்து பேட்டிங் செய்ய வந்த சுந்தர்

ஆனால் இந்தியா அணி சேஸிங் செய்யும்போது அவர் இறுதியில் களம் இறங்கினார். அவர் 7 ர்ன்கள் எடுத்தார். இந்திய அணியும் வெற்றி பெற்றது. அவர் பேட்டிங் செய்ய களத்திற்கு வந்திருந்தாலும் அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாடுவது சந்தேகமாகி உள்ளது. 

முதல் ஒருநாள் போட்டிக்கு பின்னர் பேசிய கே.எல். ராகுல், வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் செய்ய வந்தபோது, அவரால் ஓட முடியாது என தெரியாது. வாஷிங்டன் சுந்தருக்கு முதல் இன்னிங்ஸில் வலி ஏற்பட்டது எனக்கு தெரியும். ஆனால் அது அவ்வளவு தீவிரமானது எனக்கு தெரியாது. பந்தை அவர் நன்றாக எதிர்கொண்டு விளையாடினார். ஆனால் அவரால் ரன் ஓட முடியவில்லை. அவர் ஓட முடியாமல் தவித்ததை நான் பார்த்தேன். அப்போதுதான் காயத்தின் தன்மையானது எனக்கு புரிந்தது என கூறினார். 

Will Washington Sundar Play In Next 2 Matches: வாஷிங்டன் சுந்தர் அடுத்த 2 போட்டிகளில் விளையாடுவாரா?

வாஷிங்டன் சுந்தர் தசை பிடிப்பு ஏற்பட்ட நிலையில், அவருக்கு போட்டி முடிந்த பின்னர் ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறினார். இந்திய அணியில் அடுத்தடுத்து இரண்டு முக்கிய வீரர்கள் காயமடைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

India Squad For New Zealand ODI Series: நியூசிலாந்து ஒருநாள் அணிக்கான இந்திய அணி 

சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்)*, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், துருவ் ஜுரேல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால்.    

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.