சென்னை: இலங்கைத் தமிழர்கள் விவகாரம் குறித்து பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி உள்ளார். அதில், இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை களைந்திட உரிய தூதரக நடவடிக்கை தேவை என வலியுறுத்தி உள்ளார். இலங்கை அரசியலமைப்பு திருத்தங்களால், இலங்கை தமிழ்ச்சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு, உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களால் இலங்கைத் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகளை களைந்திட வேண்டு […]