Royal Challengers Bengaluru IPL 2026: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த சீசனில்தான் ஐபிஎல் கோப்பையை வென்றது. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில், அடுத்தடுத்த அதிர்ச்சி செய்திகள் வெளியாகி சோகத்தில் ஆழ்த்தியது. முதலில், ஆர்சிபி அணி கோப்பையை வென்றவுடன் அதனை கொண்டாட ஒரு நிகழ்வை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், அந்த அணிக்கும் சின்னசாமி மைதானத்திற்கும் பெரிய பிரச்சனையாக வந்தது. இதனால் வரும் ஐபிஎல்லில் பெங்களூரு அணி சின்னசாமி மைதானத்தில் விளையாடுமா என்ற கேள்வி எழும்பி உள்ளது.
Add Zee News as a Preferred Source
இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு மற்றொரு அதிர்ச்சியாக அந்த அணியில் 4 முக்கிய வீரர்கள் காயம் ஏற்பட்டுள்ளது. அதாவது, கடந்த ஐபிஎல் தொடரில் கோப்பையை கைப்பற்ற காரணமாக இருந்த கேப்டன் ரஜத் பட்டிதார், டிம் டேவிட், ஜோஷ் ஹெசில்வுட் மற்றும் ஃபில் சால்ட் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரஜத் பட்டிதார் (Rajat Patidar)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக ரஜத் பட்டிதார் இருந்து வருகிறார். ஃபாப் டு பெள்சிஸுக்கு பின்னர் இந்த பொறுப்புக்கு வந்த அவர், 2025 ஐபிஎல் சீசனையும் கைப்பற்ற வழிவகுத்தார். இந்த நிலையில், விஜய் ஹசாரே டிராபியில் விளையாடும்போது காயம் அடைந்தார்.
டிம் டேவிட் (Tim David)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஃபினிஷராக இருந்து வருகிறார் டிம் டேவிட். வரும் ஐபிஎல் தொடருக்காக ஆர்சிபி அணி டிம் டேவிட்டை தக்கவைத்துக்கொண்டுள்ளது. இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பிக் பாஷ் லீக் போட்டியில் விளையாடும்போது, அவருக்கு தொடை எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஃபில் சால்ட் (Phil Salt)
விராட் கோலியுடன் சேர்ந்து தொடக்க ஆட்டக்காரராக ஃபில் சால்ட் ஒரு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு பெருதவியாக இருந்தார். இவரை அந்த அணி வரும் ஐபிஎல் தொடருக்காக ரூ. 11.5 கோடிக்கு தக்கவைத்துள்ளது. இந்த நிலையில், அவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜோஷ் ஹேசில்வுட் (Josh Hazlewood)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார் ஜோஷ் ஹேசில்வுட். அவர் கடந்த சீசனில் கோப்பையை கைப்பற்ற முக்கிய பங்கு வகித்தார். இந்த நிலையில், ஜோஷ் ஹேசில்வுட்டுக்கு தொடை தசை பிரச்சனை காரணமாக அவதிபட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் 4 முக்கிய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது அவர்கள் வரும் ஐபிஎல்லில் விளையாடுவார்களா என்ற கேள்வி எழும்பி உள்ளது. அதுமட்டுமல்லாமல் அவர்கள் காயத்தில் இருந்து மீண்டு வரும் நிலையில், அவர்களின் செயல்திறன் எப்படி இருக்கும் என்ற சந்தேகமும் உருவாகி உள்ளது.
RCB Full Squad For IPL 2026: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர்கள் பட்டியல்
ரஜத் படிதார் (கேட்ச்), விராட் கோலி, தேவ்தத் படிக்கல், பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, க்ருனால் பாண்டியா, ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், ஜேக்கப் பெத்தேல், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள், புவனேஷ்வர் குமார், நுவான் துஷாரா, ரசிக் சிங், அபிநந்தன் ஷர்மா, சுயாஷ் சர்மா.
RCB Mini Auction Buying: ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள்
வெங்கடேஷ் ஐயர் (ரூ 7 கோடி), ஜேக்கப் டஃபி (ரூ 2 கோடி), சாத்விக் தேஸ்வால் (ரூ 30 லட்சம்), மங்கேஷ் யாதவ் (ரூ 5.2 கோடி), ஜோர்டான் காக்ஸ் (ரூ. 75 லட்சம்), விக்கி ஓஸ்ட்வால் (ரூ 30 லட்சம்), விஹான் மல்ஹோத்ரா (ரூ 30 லட்சம்), கனிஷ்க் சவுகான் (ரூ 30 லட்சம்).
About the Author
R Balaji