தோனிக்கும் இதே போல நடந்துள்ளது! மைதானத்தில் வருத்தம் தெரிவித்த கோலி!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வதோதராவில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஆனால், போட்டியின் போது நடந்த ஒரு சம்பவம் கோலியின் மனதை வெகுவாக பாதித்துள்ளது. கிரிக்கெட் மைதானத்தில் ரசிகர்கள் ஆரவாரம் செய்வது சகஜம் தான். ஆனால், சொந்த நாட்டு வீரர் ஒருவர் ஆட்டமிழக்கும் போது, அடுத்து வரும் நட்சத்திர வீரருக்காக ரசிகர்கள் கொண்டாடுவது எந்த விதத்தில் நியாயம்? வதோதராவில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கு பிறகு, விராட் கோலி இது குறித்து தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார். “இதே கொடுமையை எம்.எஸ். தோனிக்கும் பார்த்திருக்கிறேன்,” என்று அவர் கூறியிருப்பது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Add Zee News as a Preferred Source

நடந்தது என்ன?

முதல் ஒருநாள் போட்டியில் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஆட்டமிழந்தார். பொதுவாக ஒரு விக்கெட் விழுந்தால் மைதானமே அமைதியாகிவிடும். ஆனால், ரோகித் அவுட் ஆன அடுத்த நொடியே வதோதரா மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். காரணம், அடுத்ததாக விராட் கோலி களமிறங்க போகிறார் என்பது தான். இந்நிலையில், போட்டி முடிந்த பிறகு இது குறித்து பேசிய விராட் கோலி, தனது அதிருப்தியை பதிவு செய்துள்ளார். “உண்மையை சொல்ல வேண்டுமென்றால், எனக்கு இது துளியும் பிடிக்கவில்லை. ரசிகர்கள் உற்சாகமடைவதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவர்கள் என் ஆட்டத்தை பார்க்க விரும்புவது எனக்கு கிடைத்த ஆசிர்வாதம் தான். ஆனால், ஒரு விக்கெட் விழும்போது, அதுவும் நம் அணியின் வீரர் அவுட் ஆகும்போது இப்படி கொண்டாடுவது சரியல்ல. இதை நான் எம்.எஸ். தோனி விளையாடிய காலத்திலும் பார்த்திருக்கிறேன்,” என்று வேதனையுடன் கூறினார்.

 If I look back at my whole journey, it’s nothing short of a dream come true. 

 Virat Kohli reflects on his incredible career after becoming the d highest run-getter in men’s international cricke#TeamIndia | #INDvNZ | @imVkohli | @idfcfirstbank pic.twitter.com/87BgcZlx4b

— BCCI (@BCCI) January 11, 2026

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிகளின் போது, தோனி களமிறங்க வேண்டும் என்பதற்காகவே ஜடேஜா போன்ற வீரர்கள் அவுட் ஆகும்போது ரசிகர்கள் ஆரவாரம் செய்வதை நாம் பார்த்திருக்கிறோம். அதே போன்ற ஒரு கலாச்சாரம் இந்திய அணியிலும் பரவுவதைத்தான் கோலி சுட்டிக்காட்டியுள்ளார். “நான் களத்தில் இறங்கும்போது மக்களின் முகத்தில் மகிழ்ச்சியை பார்ப்பது எனக்கு பிடிக்கும். ஆனால், அது இன்னொருவரின் விக்கெட்டை சார்ந்திருக்க கூடாது,” என்றும் விராட் கோலி தெளிவுபடுத்தினார்.

கோலியின் சாதனை

இந்த போட்டியில் 91 பந்துகளில் 93 ரன்கள் குவித்து, அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார் கோலி. மேலும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து, அதிவேகமாக 28,000 சர்வதேச ரன்களை கடந்த வீரர் என்ற வரலாற்று சாதனையும் படைத்தார். சச்சினை விட 20 இன்னிங்ஸ்கள் குறைவாகவே எடுத்துக்கொண்டு இந்த மைல்கல்லை எட்டியுள்ளார் கோலி. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, டேரில் மிட்செல் மற்றும் டெவோன் கான்வே ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 300 ரன்களை குவித்தது. கடினமான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு, கோலி (93) மற்றும் சுப்மன் கில் (56) நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.

இறுதிக்கட்டத்தில் கோலி ஆட்டமிழந்ததால் பதற்றம் ஏற்பட்டது. ஆனால், கே.எல். ராகுல் நிதானமாக விளையாடி 21 பந்துகளில் 29 ரன்கள் குவித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.