சென்னை: மெரினா கடற்பரப்பில் குப்பைகள் போட்டால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மெரினா மற்றும் சென்னையில் உள்ள கடற்கரையில் உரிய விதிகளைப் பின்பற்றாமல் குப்பை போடுபவர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என்றும் பொதுமக்கள் குப்பைகளை அங்கு வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டியில் போடுங்க.. இல்லையெனில் அபராதம் கட்ட நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தியில், “சென்னையின் பெருமையாகவும், சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருகை […]