2008 ஆம் ஆண்டிலிருந்து ஐபிஎல்லில் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கடந்த ஆண்டு வரை ஒரு கோப்பை கூட வெற்றி பெறாமல் இருந்து வந்தது. விராட் கோலி போன்ற சீனியர் வீரர்கள் அணியில் இருந்தும் அவர்களால் இத்தனை வருடங்களாக ஒரு கோப்பையை கூட வெல்ல முடியவில்லை. இதனால் ஆர்சிபி ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். இதனை போக்கும் விதமாக ஐபிஎல் 2025-ல் முதல் முறையாக கோப்பையை வென்று சாதனை படித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடிய தங்களது முதல் கோப்பையை வென்றது. கடந்த ஆண்டு ஆர்சிபி அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்ட ரஜத் பட்டித்தார் தலைமையில் முதன் முதலாக ஆர்சிபி அணி கோப்பையை வென்றது.
Add Zee News as a Preferred Source

பெங்களூரில் நடந்த சோகம்
கோப்பையை வென்றதும் ஆர்சிபி நிர்வாகம் பெங்களூரில் கோப்பையுடன் பேரணி நடத்தியது. இந்த பேரணியில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து ஆர்சிபி அணையின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதன் காரணமாக இனிவரும் காலத்தில் பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் எந்த ஒரு போட்டிகளையும் நடத்த தடை விதிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. மேலும் இன்னும் மூன்று மாதங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் கர்நாடகா கிரிக்கெட் சங்கம் ஐபிஎல் போட்டிகளை பெங்களூரில் நடத்துவதற்கு எந்த ஒரு முன்னேற்பாடுகளையும் ஏற்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஆர்சிபி அணியின் புதிய ஹோம் கிரவுண்ட்
தற்போது வெளியாகி உள்ள தகவலின்படி ஆர்சிபி அணி நவி மும்பை மற்றும் ராய்பூரில் உள்ள மைதானங்களில் தங்களது ஹோம் போட்டிகளை விளையாட உள்ளதாக கூறப்படுகிறது. மகாராஷ்டிராவின் நவீன் மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் ஸ்டேடியத்தில் தங்களது ஐந்து போட்டிகளையும், ராய்ப்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் ஸ்டேடியத்தில் இரண்டு போட்டிகளையும் விளையாட உள்ளதாக கூறப்படுகிறது.

ரசிகர்கள் சோகம்
பொதுவாக சின்னச்சாமி மைதானத்தில் நடைபெறும் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். காரணம் அது மிகவும் சிறிய மைதானம் என்பதால் சிக்ஸர் மழைகள் பொழியும். குறிப்பாக சென்னை மற்றும் ஆர்சிபி அணிகளுக்கிடையிலான போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றால் டிக்கெட்களுக்கு கடும் டிமாண்ட் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு சின்னசாமி மைதானத்தில் போட்டிகள் நடைபெறாததால் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். ஆனாலும் ஒரு சிலர் மகிழ்ச்சியாக உள்ளனர். காரணம் சின்னசாமி மைதானத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றதை விட மற்ற அணிகள் அதிகம் வெற்றி பெற்றுள்ளனர். அந்த மைதானம் ஆர் சி பி அணிக்கு ஒரு ராசியில்லாத மைதானமாகவே பார்க்கப்படுகிறது.
இந்தாண்டு கோப்பையை வெல்லுமா
சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் மினி இடத்தில் ஆர்சிபி அணி தங்களுக்கு வேண்டிய வீரர்களை சரியான முறையில் ஏலத்தில் எடுத்திருந்தனர். அவர்களது பேட்டிங்கை போலவே, பௌலிங்கும் சமீபத்திய ஆண்டுகளில் சிறப்பாக இருந்து வருகிறது. அதுதான் அவர்களின் வெற்றிக்கும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டு முதல் முறையாக கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த ஆண்டும் கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். தங்களது ஹோம் கிரவுண்ட் மாற்றப்பட்டது குறித்து விரைவில் ஆர்சிபி அணி அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
About the Author
RK Spark