செம ஃபார்மில் CSK வீரர்கள்.. இதுவரை விஜய் ஹசாரே டிராபியில் கலக்கியவர்கள் யார் யார்? முழு விவரம்

Chennai Super Kings Latest News: இந்தியாவின் மிகவும் பிரபலமான உள்ளூர் கிரிக்கெட் போட்டியான விஜய் ஹசாரே டிராபி தொடர் கடந்த மாதம் இறுதியில் தொடங்கு நடைபெற்று வருகிறது. இத்தொடர் தற்போது காலிறுதி வரை சென்றிருக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த வீரர்கள் பலர் விளையாடி வருகின்றனர். 

Add Zee News as a Preferred Source

CSK Players In Vijay Hazare Trophy Teams: சிஎஸ்கே அணியில் எந்தெந்த அணியில் இடம் பிடித்துள்ளனர். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ராமகிருஷ்ணா கோஷ் ஆகியோர் மகராஷ்டிரா அணிக்காக விளையாடி வருகின்றனர். சர்பராஸ் கான் மற்றும் சிவம் துபே மும்பை அணிக்காக விளையாடி வருகின்றனர். உர்வில் படேல் குஜராத் அணிக்காகவும் அமன் கான் புதுச்சேரி அணிக்காகவும் பிரசாந்த் வீர் உத்தர பிரதேச அணிக்காகவும் ஸ்ரேயாஸ் கோபால் கர்நாடக அணிக்காகவும் சஞ்சு சாம்சன் கேரளா அணிக்காகவும் விளையாடி வருகின்றனர். 

அதேபோல் குர்ஜப்னீத் சிங் தமிழ்நாட்டு அணிக்காக அனுஷுல் கம்போஜ் ஹரியானா அணிக்காகவும் கலீல் அகமது ராஜஸ்தான் அணிக்காகவும் விளையாடி வருகின்றனர். இந்த நிலையில், இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரான இவர்கள் விஜய் ஹசாரே டிராபி தொடரில் குவித்த ரன்கள் மற்றும் கைப்பற்றிய விக்கெட்கள் எத்தனை என்பதை இங்கு பார்க்கலாம். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் விஜய் ஹசாரே டிராபியில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், சதங்களை விளாசி வருகிறார். மறுபுறம் சர்பராஸ் கான் அதிரடியான பாணியை கையாண்டு சிஎஸ்கே அணி பிளேயிங் 11ல் இடம் பிடிக்க போராடி வருகிறார். பிரசாந்த் வீர் போன்ற சென்னை அணியின் புதுமுக வீரர்களும் அசத்தி வருகின்றனர். 

CSK players most runs in Vijay Hazare Trophy: 2025-26 விஜய் ஹசாரே டிராபியில் சிஎஸ்கே வீரர்களால் எடுக்கப்பட்ட (QF 1&2 க்குப் பிறகு) ரன்கள்

ருதுராஜ் கெய்க்வாட் – 413, சர்பராஸ் கான் – 303, ராமகிருஷ்ண கோஷ் – 225, உர்வில் படேல் – 194, அமன் கான் – 183, பிரசாந்த் வீர் – 133, ஷ்ரேயாஸ் கோபால் – 122, சஞ்சு சாம்சன் – 112, சிவம் துபே – 32 ர்னகளை குவித்துள்ளனர். 

CSK players most wickets in Vijay Hazare Trophy: 2025-26 விஜய் ஹசாரே டிராபியில் CSK வீரர்கள் எடுத்த (QF 1&2 க்குப் பிறகு) விக்கெட்டுகள்

ராமகிருஷ்ண கோஷ் – 17, குர்ஜப்னீத் சிங் – 15, அன்ஷுல் கம்போஜ் – 14, ஷ்ரேயாஸ் கோபால் – 12, கலீல் அகமது – 10, பிரசாந்த் வீர் – 10, சிவம் துபே – 6, அமன் கான் – 6 விக்கெட்களை கைப்பற்றி உள்ளனர். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த இவர்கள் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இதனை வைத்தே சில வீரர்களின் இடம் பிளேயிங் 11ல் தீர்மானிக்கப்பட இருப்பதால் அவர்கள் கடினமாக உழைத்து வருகின்றனர். 

CSK Full Squad For IPL 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் விவரம் 

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஆயுஷ் மத்ரே, எம்.எஸ். தோனி, சஞ்சு சாம்சன், டெவால்ட் ப்ரீவிஸ், உர்வில் படேல், ஷிவம் துபே, ஜேமி ஓவர்டன், ராமகிருஷ்ண கோஷ், நூர் அகமது, கலீல் அகமது, அன்ஷுல் கம்போஜ், குர்ஜப்னீத் சிங், ஷ்ரேயாஸ் கோபால், முகேஷ் சவுத்ரி, நாதன் எல்லிஸ், அகேல் ஷர்மான், பிரஷாந்த் ஷர்மான், பிரஷாந்த் ஷர்மான், சர்பராஸ் கான், மாட் ஹென்றி, ராகுல் சாஹர், சாக் ஃபௌல்க்ஸ்.

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.