IND VS NZ 2nd ODI Latest News: இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நடைபெற இருக்கிறது. இதில் தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. 11ஆம் தேதி இத்தொடரின் முதல் போட்டி நடைபெற்றது.
Add Zee News as a Preferred Source
IND vs NZ 2nd ODI: நாளை இரண்டாவது ஒருநாள் போட்டி
அப்போட்டி வதோதராவில் நடைபெற்ற நிலையில், இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் நாளை (ஜனவரி 14) நடக்க இருக்கும் இரண்டாவது ஒருநாளை போட்டியையும் வென்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முன்னைப்புடன் உள்ளது. மறுபுறம் நியூசிலாந்து அணி போட்டியை வென்று தொடரை தக்கவைத்துக்கொள்ளவும் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கவும் தயாராகி வருகிறது.
4ல் மூன்று போட்டிகள் தோல்வியடைந்த இந்தியா
நாளை நடக்கும் இரண்டாவது போட்டி ராஜ்கோட் நகரில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் நடைபெறுகிறது. மதியம் 1.30 மணிக்கு போட்டியானது தொடங்குகிறது. இந்த ராஜ்கோட் மைதானத்தில் 28000 பேர் அமரலாம். முன்னதாக இந்திய அணி 2013ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற 4 ஒருநாள் போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. 3 தோல்விகளை சந்தித்துள்ள இந்திய அணி நாளை நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது.
மழை பெய்யுமா?
நாளைய போட்டியின்போது மழை பெய்ய வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பம் 13 முதல் 27 டிகிரி செல்சியஸாக இருக்கும் என தெரிகிறது. அதனால் போட்டி மழையால் தடைபட வாய்ப்பில்லை.
பிட்ச் எப்படி?
ராஜ்கோட் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானதாக இருக்கிறது. இங்கு நல்ல பவுன்ஸ் இருக்கும். நிதானமாகவும் பொறுப்புடனும் ஆடும் பேட்ஸ்மேன்கள் இங்கு நல்ல ரன்களை எடுப்பார்கள். அதேசமயம் பந்து வீச்சாளர்களுக்கும் இந்த மைதானம் சற்று சாதகமாக இருக்கும் என தெரிகிறது. இங்கு இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளிலுமே முதல் பேட்டிங் செய்தவர்கள் 300 ரன்களை கடந்துள்ளனர். அதேபோல் முதல் பேட்டிங் செய்தவர்களே இங்கு வெற்றி பெற்றுள்ளனர். இதுவரை நடந்த 4 போட்டிகளும் அப்படியே. எனவே டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைதான் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணி
சுப்மான் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், துருவ் ஜுரேல், நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
About the Author
R Balaji